சிக்ஸ் கொடுக்க வந்த அம்பயரே, ஒரு நிமிடம் ஆடிப்போன மாதிரி ஃபீல்ட்டிங் செய்த ஆஸ்திரேலிய வீரர்! – வீடியோ உள்ளே

0
41698

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து போட்டியின்போது ஆஸி., வீரர் ஆஸ்டன் அகர் அபாரமாக பீல்ட்டிங் செய்து சிக்ஸரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக முடித்து சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி உடனடியாக ஆஸ்திரேலியாவில் தங்கி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வருகிறது.

- Advertisement -

நவம்பர் 17ஆம் தேதி துவங்கிய முதல் ஒரு நாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. மூன்றாவது இடத்தில் களமிறங்கிய டேவிட் மலான் ஆரம்ப முதலே தனது அதிரடியை வெளிப்படுத்த துவங்கினார்.

ஆனால் இவருக்கு பக்கபலமாக எந்த வீரரும் நிற்கவில்லை. வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறி வந்தனர். ஒரு முனையில் நின்று அரைசதம் அடித்த பிறகு, மேலும் அதிரடியை வெளிப்படுத்திய இவர் சதம் விலாசினார்.

- Advertisement -

50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 287 ரன்கள் அடித்திருந்தது. டேவிட் மலான் 128 பந்துகளில் 134 ரன்கள் எடுத்திருந்தார். அதற்கு அடுத்த அதிகபட்சமாக வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லே 34 ரன்கள் அடித்திருந்தார். ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஜாம்பா இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் மற்றும் டிராவிஸ் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 147 ரன்கள் சேர்த்தது. டிராவிஸ் 69 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்ததாக வந்த ஸ்டீவ் ஸ்மித் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார்.

டேவிட் வார்னர் 86 ரன்கள் அடித்திருந்தபோது, ஆட்டம் இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்மித் 80 ரன்களும், கேமரூன் கிரீன் 20 ரன்கள் அடித்திருந்தனர். இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

அபாரமான பீல்ட்டிங்!

போட்டியின் 45ஆவது ஓவரின் போது டேவிட் மலான் அடித்த பந்து சிக்ஸரை நோக்கி சென்றது. அதை கடைசி நேரத்தில் லாவகமாக பிடித்து உள்ளே வீசினார் ஆஸ்டன் அகர். இவரின் இந்த பீல்ட்டிங் அசாத்தியமாக இருந்ததால், இணையதளத்தில் வைரலாகி வருகிறது.