உலக கோப்பை டி20 தொடரில் பல மாயாஜாலங்களை அவர் செய்து காட்டுவார் – ஆசிஸ் நெஹ்ரா குறிப்பிட்டுள்ள அந்த சிஎஸ்கே வீரர்

0
261
Ashish Nehra

ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்க தொடங்கிவிட்டது. இரண்டு வாரங்களில் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் அதற்கடுத்த சில நாட்களில் உலக கோப்பை டி20 தொடர் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் தற்பொழுதே உலக கோப்பை டி20 தொடர் குறித்து பேச துவங்கி விட்டார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் உலக கோப்பை போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்திய அணி வெளியிட்ட வீரர்கள் பட்டியலில், ஸ்பின் பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நகரத்தில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளதால், அதற்கு ஏற்றவாறு ஸ்பின் பந்து வீச்சாளர்களை பிசிசிஐ தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த வீரரை அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாது

இந்திய அணியில் ஸ்பின் பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் பட்டேல், வருன் சக்கரவர்த்தி, ராகுல் சஹர் மற்றும் ரவீந்திர ஜடேஜா என ஒரு பட்டாளமே இருக்கின்றனர். இந்த வீரர்கள் மத்தியில் ரவிந்திர ஜடேஜா நிச்சயமாக இந்திய அணியில் அனைத்து போட்டிகளிலும் இடம்பெறுவார் என்று தற்போது ஆசிஸ் நெஹ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு போட்டி துவங்கும் முன்பு இந்திய அணியின் ஆலோசகர் மகேந்திர சிங் தோனி, தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோரின் நினைவில் ஜடேஜாவின் பெயர் நிச்சயமாக இருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து ரீதியிலும் தன்னுடைய மிக சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாரமாக விளையாடி வருகிறார்.

8 இன்னிங்சில் ஒரு அரைசதம் உட்பட 179 ரன்களை குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 59.67 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 146.72 ஆக உள்ளது.பேட்டிங்கில் மட்டுமின்றி பவுலிங்கிலும் 10 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார், அவருடைய பவுலிங் எக்கானமி 6.85 ஆக மட்டுமே உள்ளது.

- Advertisement -

பல மாயாஜாலங்களை ரவீந்திர ஜடேஜா செய்து காட்டுவார்

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த போட்டியில், ஹர்ஷால் பட்டேல் ஓவரில் அவர் அடித்த 37 ரன்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறந்துவிட முடியாது. அந்த போட்டியில் மிக அற்புதமாக விளையாடி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அதேபோல சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் வீரர்களாக பார்க்கப்படும் தோனி,ரஸல்,பொல்லர்டு போல ஜடேஜாவும் இறுதி ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில் நடைபெற இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில், இந்திய அணிக்கு பல மாயாஜாலங்களை ஜடேஜா நிச்சயமாக செய்து காட்டுவார் என்று நெஹரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.