வீடியோ.. சொன்ன மாதிரியே நீ அடுத்த தோனிதான்யா.. நின்னு நிதானமா சம்பவம் செய்த ரிங்கு சிங்!

0
819
Rinku

தற்பொழுது இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணி ஜஸ்ட்பிரித் பும்ரா தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பவுலிங் செய்வது என தீர்மானித்தது. இந்திய அணியில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.

துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியிலும் மூன்றாவது வீரராக வந்த திலக் வர்மா இரண்டு பந்தில் ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதற்கு அடுத்து ருத்ராஜ் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்து இரண்டு பேரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய துணை கேப்டன் ருத்ராஜ் அரை சதம் அடித்து 43 பந்தில் ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரன் வேகத்தை அதிகரிக்க வேண்டிய நேரத்தில் அவரது விக்கெட் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். மிகப் பொறுமையாக ஆட்டத்தை நகர்த்திய ரிங்கு சிங் முதல் 15 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி இரண்டு ஓவர்கள் வரும் வரை தோனி மாதிரி மிகவும் பொறுமையாக இருந்தார்.

இதற்கு அடுத்து 19ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர் அடித்து அமர்க்களப்படுத்தினார். மீண்டும் இறுதி ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 21 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் சிவம் துபே இரண்டு சிக்ஸர் அடித்தார். அவர் ஆட்டம் இழக்காமல் பதினாறு பந்தில் இரண்டு சிக்ஸர்கள் உடன் 22 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது.

கடந்த வெஸ்ட் இண்டிஸ் தொடரில் ஆட்டத்தை மிகச் சரியாக எடுத்துச் சென்று முடித்துக் கொடுப்பதற்கு ஆள் இல்லாமல்தான் தொடரை இந்திய அணி இழந்தது. அதே சமயத்தில் முன்னாள் இந்திய வீரர்கள் ரிங்கு சிங் ஃபினிஷிங் இடத்தில் தோனி மாதிரி வருவார் என்று கூறி வந்தார்கள். இந்த நிலையில் அதேபோல் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்று, கடைசி ஆறு பந்துகளில் 23 ரன்கள் எடுத்து, அணியை நல்ல ஸ்கோருக்கு கொண்டு வந்து ரிங்கு சிங் ஆட்டம் இழந்தார்!