இந்த இந்திய பவுலர் கிரிக்கெட்டில் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வார் ; அதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள் – கிளென் மெக்கராத் உறுதி

0
604
Glenn McGrath

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து பரவசப்படுத்தக்கூடிய பெயராக உம்ரான் மாலிக் இருக்கிறார் என்று முன்னாள் இந்திய பிரபல வீரர் கவாஸ்கர், ஆச்சரியத்துச் சொல்லும் அளவில் தனது அதீத வேகமான பந்துவீச்சால் ஒரு கவர்ச்சியை உருவாக்கி இருக்கிறார் ஜம்மூ காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்.

ஐ.பி.எல்-ல் தனது மாநில வீரரும் நண்பருமான அப்துல் சமாத் மூலம் ஹைதராபாத் அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வந்து, 2021 ஐ.பி.எல் சீசன் இரண்டாம் கட்டமாக யு.ஏ.இ-ல் துவங்க இருந்த பொழுது, வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட, ஹைதராபாத் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றவர் உம்ரான் மாலிக்.

- Advertisement -

அவரது வேகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஹைதராபாத் அணி நிர்வாகம் இந்த ஆண்டு நான்கு கோடிக்கு ரூபாய்க்குத் தக்கவைத்தது. 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அவர் தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை அள்ளிய பொழுது, பல முக்கியமானவர்களின் பார்வை அவர் மீது விழுந்தது.

அவரது சிறப்பான ஐ.பி.எல் செயல்பாடு அவரைத் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற செய்தது. ஐந்து ஆட்டங்களிலும் அவருக்கு ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அடுத்து அயர்லாந்து அணியுடன் நடக்கவிருக்க டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இந்த நிலையில் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியா வீரர் கிளன் மெக்ராத் உம்ரான் மாலிக் பற்றி முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் “ஆமாம் பந்துவீச்சின் எக்ஸ்பிரஸ் வேகம் தனித்துவமானது. மேலும் இது சிறப்பு வாய்ந்தது. அந்த அதிகப்படியான வேகத்தை கட்டுப்பாடு மற்றும் நிலைத்தன்மையோடு உங்களால் இணைக்க முடிந்தால், நீங்கள் உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளராக மாறிவிடுவிர்கள்” என்றவர் தொடர்ந்து பேசினார்.

- Advertisement -

அதில் “அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது. அவர் இப்போது இதிலிருந்து வெளியேறி உள்நாட்டு தொடர்களில் பந்துவீச வேண்டும். இதனால் அவரால் தொடர்ந்து தினமும் போட்டியில் பந்துவீச முடியும். அவரது பந்துவீச்சு பணிக்கான நெறிமுறை, அவர் தொடர்ந்து கடினமாய் உழைப்பது, அவர் உயர்தர போட்டிகளுக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொண்டு, இரசித்து விளையாடுவது, இதையெல்லாம் சரியாக அமைந்தால், அவர் கிரிக்கெட்டில் மிக உயர்ந்த இடத்திற்குச் செல்வார். இதெல்லாம் சரியாக நடக்கும்போது ஒருவர் எவ்வளவு பெரிய உயரத்திற்கும் போக முடியும். அதை யாரால் எப்படி கூறமுடியும்?!” என்று தெரிவித்து இருக்கிறார்!