“அர்ஷ்தீப் சிங் எப்படி பவுலிங் பண்ணனும்னு கத்துக்கனும்” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து!

0
741

அர்ஷதிப் சிங் ஒருநாள் போட்டிகளுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா.

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட இளம் வீரர் அர்ஷ்தீப் சிங், 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மூன்றாவது டி20 போட்டியில் நான்கு ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து டி20 போட்டிகளில் அசத்தி வந்த அர்ஷ்தீப் சிங், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது, சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் அவரது அறிமுகம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. 8.1 ஓவர்களில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தாமல் இருந்தார்.

அர்ஷதீப் சிங் ஒருநாள் போட்டிகளில் எப்படி பந்துவீசவேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா.

“அர்ஷதிப் சிங் இன்னும் டி20 போட்டிகளின் மனநிலையிலேயே இருக்கிறார். முதல் ஒருநாள் போட்டியில் அவர் பந்து வீசிய விதம் டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு இருந்தது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் அது எடுபடாது.

ஒருநாள் போட்டிகளுக்கு என்று அணுகுமுறை இருக்கிறது. அவசரம் காட்டாமல் பொறுமையாக நேரம் எடுத்துக்கொண்டு அதற்கேற்றவாறு பந்துவீச வேண்டும். நான்கு ஓவர்களுக்கும் 10 ஓவர்களுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும். இனிவரும் போட்டிகளில் அதை அவருக்கு அணி நிர்வாகம் புரியவைக்க வேண்டும்.” என்று கருத்து தெரிவித்தார்.