உ.கோ வெற்றி கொண்டாட்டம்.. அர்ஸ்தீப் சிங் செய்த நெகிழ்ச்சியான காரியம்.. பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்

0
483
Arsdeep

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு சத்தம் இல்லாமல் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவராக இளம் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் இருக்கிறார். உலகக் கோப்பையை வென்ற கொண்டாட்டங்களில் அவர் செய்திருக்கும் ஒரு காரியம், அவர் மூத்த வீரர்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்? என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அதிரடி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 8 போட்டிகளில் ஓவருக்கு 4 ரன்கள் வீதம் என்கின்ற ஆவரேஜில் 15 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். இவர் ஒரு முனையில் ஏற்படுத்திய அழுத்தத்தை இன்னொரு முனையில் அர்ஸ்தீப் சிங் மிகச் சிறப்பாக அறுவடை செய்திருக்கிறார்.

- Advertisement -

அர்ஸ்தீப் சிங் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் எட்டு போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் ஒரு டி20 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்கின்ற மகத்தான சாதனையையும் படைத்திருக்கிறார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் பவர் பிளே மற்றும் மிடில் ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்தோடு மிக முக்கியமாக 19வது ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே டேவிட் மில்லரை வைத்துக் கொண்டு கொடுத்தார். இது ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசுவதற்கு மிகவும் உதவியாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் அதிக விக்கெட் கைப்பற்றிய போதிலும் கூட அதன் நினைவாக போட்டிக்குப் பிறகு ஸ்டெம்ப் எதையும் அவர் வீட்டுக்கு எடுத்து வரவில்லை. இது குறித்து அவரது தந்தை அவரிடம் கேட்ட பொழுது மிகவும் நெகிழ்ச்சியான பதில் ஒன்றைக் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க :

மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவர் மட்டுமே இந்த உலகக் கோப்பையின் வெற்றி கொண்டாட்டங்களில் மிகவும் முக்கியமானவர்களாகவும் அதற்கு தகுதியானவர்களாகவும் இருக்கிறார்கள் எனவும், எனவே தான் தனிப்பட்ட முறையில் அதிலிருந்து எந்த ஒரு அடையாளத்தையும் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் கூறியிருக்கிறார். அவர் தன்னுடைய மூத்த வீரர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதை தற்போது சமூக வலைதளத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது!