இந்திய அணி நேற்று டி20 உலக கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற பொழுதும் சில விஷயங்கள் கவலை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது.
இந்திய அணிக்கு ஜாகிர் கானுக்கு பிறகு நல்ல இடது கை வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இருந்து வந்தது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் அணிக்காக விளையாடும் அர்ஸ்தீப் சிங் இந்திய அணிக்கு கொண்டுவரப்பட்டார்.
இவர் யார்க்கர் பந்துகளை வீசுவதில் வல்லவர் என்பதாலும், மேலும் பந்து புதியதாக இருக்கும் பொழுது இரண்டு புறத்திலும் ஸ்விங் செய்யக்கூடியவர் என்பதாலும், ஆட்டத்தின் துவக்கம் மற்றும் இறுதி கட்டத்தில் பந்து வீசுவதற்காக தயார் செய்யப்பட்டார்.
இவரின் முக்கிய ஆயுதமான யார்க்கரை தற்பொழுது இவர் வீசுவதே கிடையாது. மேலும் திடீரென இவர் புதிய முயற்சிகளில் இறங்கி ரன்களை விட்டு தரக்கூடியவராக மாறியிருக்கிறார். பீல்டிங் அமைப்புக்கு எதிராக இவர் பந்து வீசுவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.
நேற்று அயர்லாந்து அணிக்கு எதிராக பந்து வீட்டுக்கு மிக அதிக சாதகத்தை கொண்ட ஆடுகளத்தில், இவர் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினாலும் கூட, நிறைய எக்ஸ்ட்ராக்களை விட்டுக் கொடுத்தார். அத்தோடு கடைசிக் கட்டத்தில் வந்த இவர் யார்க்கர் பந்துகளையும் வீசவில்லை. அதே சமயத்தில் பும்ரா வீசி விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : இந்தியாவுல இப்படியொரு பிட்ச் இருந்தா என்ன நடக்கும் தெரியுமா?.. இது உ.கோ-யே கிடையாது – இர்பான் பதான் விமர்சனம்
நேற்று அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நான்கு ஓவர்கள் பந்து வீசி 35 ரன்கள் விட்டுக் கொடுத்தார். தற்பொழுது இவருடைய நேர்த்தி இல்லாத பந்துவீச்சு இந்திய அணிக்கு பெரிய கவலை கொடுக்கக்கூடிய விஷயமாக மாறி இருக்கிறது. ஐபிஎல் தொடரிலும் இவர் பந்துவீச்சில் நம்பகத்தன்மையை கொடுக்கவில்லை. தற்பொழுது டி20 உலக கோப்பை தொடரிலும் அது தொடர்கிறது. நேற்று பும்ரா மூன்று ஓவர் வீசி இரண்டு விக்கெட் கைப்பற்றி ஆறு ரன் மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.