“வார்னர் ஆஸ்திரேலியாவுக்கு ஆணவம் அவமரியாதை..!” – மிட்சல் ஜான்சன் கடுமையான தாக்கு!

0
13853
Johnson

உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு என்று ஒரு பெரிய கர்வமான மரபு இருக்கிறது. ஐசிசி தொடர்களை அதிகம் வெல்வதும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய மரியாதை கொடுப்பதும், தரமான மைதானம் மற்றும் ஆடுகளங்களை உருவாக்கி சிறந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொடுப்பதும் என, அவர்களுக்கு மிகச் சிறந்த கிரிக்கெட் மரபு இருக்கிறது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணுகுமுறை என்பது மிகவும் ஆக்ரோஷமான ஒன்று. அது எதிரணி வீரர்களையும் ரசிகர்களையும் எப்பொழுதும் ரசிக்க வைக்காது. ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவின் இந்த ஆக்ரோஷ அணுகுமுறை மாறி இருக்கிறது.

- Advertisement -

இதற்கு காரணம் தற்போதைய கேப்டன் கம்மின்ஸ் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அதற்கு முன்பாகவே 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்தி ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மூவரும் ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் விளையாட தடை பெற்றார்கள்.

இந்த நிகழ்வு ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆக்ரோஷமான அணுகுமுறை தளர்த்தப்பட்டது. அவர்கள் மற்ற அணிகளை போல ஆக்ரோஷத்தை பெரிய அளவில் வெளிப்படுத்தாமல் விளையாட ஆரம்பித்தார்கள்.

இதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி மெல்ல மெல்ல இந்த பாதையில் சென்று இன்று கம்மின்ஸ் தலைமையில் வேறொரு முகத்தில் இருக்கிறது. மேலும் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்கள் மொத்தமாக மூன்று ஐசிசி உலகக் கோப்பைகளை வென்று அசத்தியிருக்கிறார்கள்.

- Advertisement -

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒருவரான வார்னர் தற்பொழுது பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாலில் நடைபெற இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் உடன் ஓய்வு பெற இருக்கிறார். அவர் விரும்பியபடி ஓய்வு பெற எல்லாவற்றையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் செய்திருக்கிறது. தற்பொழுது இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும், வார்னர் உடன் சேர்ந்து விளையாடியவருமான மிட்சல் ஜான்சன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “வார்னர் விளையாட்டையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையும் விட பெரியவர் என்று நினைக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் நடந்த பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்ளவே இல்லை. அவர் தற்பொழுது தான் விரும்பியபடி ஓய்வுபெற இருக்கிறார். நமது நாட்டுக்கு ஆணவம் மற்றும் அவமரியாதையான செயல்.

சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை புள்ளி விவரங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. கண்ணியமாக விளையாடுவது மற்றும் ஒழுங்காக நடந்து கொள்வது என இதை வைத்து தான் முடிவு செய்யப்படுகிறது!” என்று காட்டமாக கூறியிருக்கிறார்!