டெல்லி அணிக்கு எதிராக எஞ்சியிருக்கும் கடைசி போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கியாக வேண்டும் – காரணத்தை விளக்கிய ஆகாஷ் சோப்ரா

0
855

நடப்பு ஐபிஎல் தொடரில் 5 முறை பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகள் மட்டும் வெற்றிகண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் கூட ஹைதராபாத் அணிக்கு எதிரான 3 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணி என்றாலே அந்த அணியில் இளம் வீரர்களுக்கு நிறைய வாய்ப்பு வழங்கப்படும். அப்படி வாய்ப்பு வழங்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி உள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் கூட 19 வயதான திலக் வர்மா மிக அற்புதமாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

அர்ஜுன் டெண்டுல்கர் கடைசி போட்டியில் கண்டிப்பாக களமிறங்க வேண்டும்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா டுவிட்டரில் அர்ஜூன் டெண்டுல்கர் குறித்து ஒரு டுவிட் செய்துள்ளார்.”மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏறக்குறைய அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கி விட்டார்கள். அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் அதே நேரத்தில் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் நீங்கள் வாய்ப்பு வழங்க வேண்டும். டெல்லி அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் களம் இறங்கியாக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்”.

வெற்றி பெறும் விதத்தில் அணியை தேர்ந்தெடுப்பதே எங்களது நோக்கம்

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள 22 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது.அர்ஜுன் டெண்டுல்கர்,
ஆரியன் ஜூயால், ஆகாஷ்மத்வால் மற்றும் ராகுல் புத்தி ஆகியோருக்கு மட்டுமே இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு வழங்க காலதாமதம் ஏற்படுகிறது என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே இடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் எங்களுக்கு விருப்பமான வீரர்கள் தான். விஷயங்கள் எவ்வாறு செல்கிறது என்பதை புரிந்து கொண்டு, ஒவ்வொரு போட்டிக்கு முன்னர் அணி வெற்றி வெற்றிப் பெறும் விதத்தில் சரியான வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே எங்களுடைய முதல் நோக்கம். அந்த தேர்ந்தெடுப்பில் அர்ஜுன் டெண்டுல்கர் சரியான வீரராக கருத்தில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அவருக்கான வாய்ப்பும் கூடிய விரைவில் வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.