அர்ஜுன் டெண்டுல்கர்;
மும்பை இன்டியன்ஸ் திலக் வர்மா அசத்தல் ஆட்டம்; 2022 சையது முஷ்டாக் அலி டி20 டிராபி!

0
1639
SMAT 2022

இந்திய உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி இந்தியாவின் 6 நகரங்களில் நடந்து வருகிறது .

இந்த தொடரில் மொத்தம் முப்பத்தி எட்டு அணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று அடுத்து காலிறுதி அடுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 136 போட்டிகள் நடக்க இருக்கிறது.

- Advertisement -

இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள கோவா மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று ஜெய்ப்பூரில் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற கோவா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.

இதன்படி ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய பிரதீக் ரெட்டி 3 ரன்களில் வெளியேறினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் தன்மய் அகர்வால் 41 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராக களமிறங்கிய மும்பை இந்தியன் அணியின் பிரபல இளம் வீரர் திலக் வர்மா 46 பந்துகளில் 62 ரன்களை 6 பவுண்டரி 2 சிக்சருடன் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.

கோவா தரப்பில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓவர்கள் பந்துவீசி, 10 ரன்கள் விட்டுக்கொடுத்து, பிரதீக் ரெட்டி, திலக் வர்மா, ராகுல் புதி, ரவி தேஜா என நான்கு முன்வரிசை வீரர்களை தன் சிறப்பான பந்து வீச்சின் மூலம் வீழ்த்தினார். அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்கு விளையாடாமல் கோவா அணி பக்கம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இதற்கு அடுத்து களமிறங்கிய கோவா அணி 18.5 ஓவரில் 140 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் 3 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் ரவிதேஜா 3.5 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.