அர்ஜுன் டெண்டுல்கர் கடைசி ஓவர் டாப் கிளாஸ் யார்க்கர்ஸ் ; கேமரூன் கிரீன் டிம் டேவிட் கலக்கலில் மும்பை வெற்றி!

0
808
Ipl2023

பதினாறாவது ஐபிஎல் சீசனின் 25 ஆவது போட்டி இன்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது!

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 28, இசான் கிஷான் 38, சூரியகுமார் யாதவ் 7, திலக் வர்மா 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்!

- Advertisement -

இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய கேமரூன் கிரீன் 40 பந்துகளில் ஆறு பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் உடன் 64 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். கடைசிப் பந்தில் டிம் டேவிட் பதினாறு ரண்களில் ரன் அவுட் ஆனார். 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. யான்சென் நான்கு ஓவர்களுக்கு 43 ரன்கள் தந்து இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஹாரி ப்ரூக் 9, ராகுல் திரிபாதி 7, மார்க்ரம் 22, அபிஷேக் ஷர்மா 1, ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். தொடர்ந்து விளையாடிய மயங்க் அகர்வால் 48, கிளாஸண் 36, யான்சென் 13, வாஷிங்டன் சுந்தர் 10, அப்துல் சமாத் 9, புவனேஸ்வர் குமார் 2 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.

ஆட்டத்தின் முடிவில் ஒரு பந்து மீதம் இருக்கையில் ஹைதராபாத் அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெஹரன்டாப், மெரிடீத், பியூஸ் சாவ்லா தலா இரண்டு விக்கெட்டுகளையும், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கட்டையும் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

கடைசி இரண்டு ஓவர்களுக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட பொழுது கேமரூன் கிரீன் அபாரமாக பந்து வீசி நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அடுத்த ஓவரை வீசிய அர்ஜுன் 5 பந்துகளையும் மிகச் சிறப்பாக யார்க்கராக வீசி அசத்தினார். மும்பை அணிக்கு ஐந்தாவது ஆட்டத்தில் இது மூன்றாவது வெற்றியாகும். ஹைதராபாத் அணிக்கு ஐந்தாவது ஆட்டத்தில் இது மூன்றாவது தோல்வி ஆகும்!