“என் இடத்தை அவருக்கு தரதா சொல்றாங்க.. அதை என்னால தாங்க முடியல!” – ஸ்டீவ் ஸ்மித் வெளியிட்ட பரபரப்பு கருத்து!

0
959
Smith

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நிறைய ஆச்சரியமான அதிர்ச்சியான முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்த வகையில் ஆஸ்திரேலியா அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வி அடைந்து, அரைஇறுதி வாய்ப்பை எடுத்ததும் கேள்விக்குறியாக்கியது.

- Advertisement -

அதே சமயத்தில் அதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் திரும்ப வந்து இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து, புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. தற்போது அரையிறுதிக்கான நான்காவது அணிக்கான இடத்தில் வலிமையாக இருக்கிறது.

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு வீரர்களின் காயம் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இதில் மிக முக்கியமாக துவக்க ஆட்டக்காரராக விளையாட இருந்த டிராவிஸ் ஹெட் விரலில் அடைந்த காயம் பெரிய பின்னடைவாக இருந்தது. ஆனாலும் அவரது திறமையின் காரணமாக அவர் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா உலகக் கோப்பை அணியில் தக்க வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு டிராவிஸ் ஹெட் களம் இறங்குவார் என்று தெரிய வருகிறது. அவர் அணிக்குள் வந்தால் லபுசேன் வெளியே செல்வது உறுதி. அதே சமயத்தில் அவர் யாருடைய இடத்தில் விளையாடுவார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் அணிக்குத் திரும்பி வரும் பொழுது அவர் நேராக துவக்க இடத்திற்கு சென்று விடுவார். மிட்சல் மார்ஸ் மூன்றாவது இடத்திற்கு வருவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக ஸ்மித் மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்படுகிறார்.

இதுகுறித்து ஸ்மித் கூறும் பொழுது “நீங்கள் பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு செல்வது என்பது முற்றிலும் வித்தியாசமான ஒரு மனநிலை என்று நான் நினைக்கிறேன்.

ஹெட் அணிக்குள் வரும்பொழுது நான் நான்காவது இடத்திற்கு செல்வேன் என்று எனக்கு சொல்லப்பட்டது. அணிக்கு என்ன வேண்டுமோ, அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

ஆனால் நான் பேட்டிங் ஆர்டரில் மூன்றாம் இடத்தில் குறிப்பிடத் தகுந்த சாதனைகளைச் செய்திருக்கிறேன். இதனால் ஒரு வகையில் நான் அதிர்ச்சி அடைந்தேன் என்பது உண்மைதான். ஆனாலும் அணிக்கு என்ன வேண்டுமோ, அதை நான் செய்வேன்!” என்று கூறியிருக்கிறார்!