கருண் நாயர் 300 அடிச்சும் தூக்கின மாதிரி சுப்மன் கில்ல தூக்க போறாங்களா? – என்ன நடக்கிறது இந்திய அணியில்?

0
587
GILL

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .. மூன்றாம் நாளான இன்று இந்திய அணி 258 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதனால் பங்களாதேஷ் அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது .. இதனைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்களை எடுத்திருந்தது

முன்னதாக 133 ரன்கள் 8 விக்கெட்களுடன் இன்றைய ஆட்டத்தை துவங்கிய பங்களாதேஷ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . அதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்திய அணி 258 ரண்களை குவித்தது . இந்திய அணிக்காக சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகியோர் சதம் அடித்தனர். இது சுப்மன் கில் அடிக்கும் அவரது முதல் டெஸ்ட் சதமாகும் .

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா திரும்ப வர இருப்பதால் யாரை நீக்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது . ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கேஎல்.ராகுலைத்தான் நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர் .

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்கள் சுப்மன் கில் இன்று மிகச் சிறப்பாக ஆடி தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் ஆனாலும் கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பும் பட்சத்தில் அவர் வெளியே அமர வேண்டிய நிலை வரலாம் என்று தெரிவித்துள்ளனர் .

இதே போல இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய கருண் நாயர் அபாரமாக ஆடி தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே ட்ரிபிள் 100 அடித்தார் . ஆனாலும் சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பிய நிலையில் அதற்குப் பிறகான போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை . இதே போன்ற ஒரு நிலை சுப்மன் கில்லுக்கும் வரலாம் என்று வேதனை தெரிவித்துள்ளனர் .

பெரும்பாலான ரசிகர்கள் சமீப காலமாக பணம் இழந்து தவித்து வரும் கே எல் ராகுலை தான் வெளியே உட்கார வைத்துவிட்டு சுப்மன் கில்லுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் . என்னதான் ஒரு வீரர் சீனியராக இருந்தாலும் அவருக்காக நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு வீரரை அமர வைப்பதை நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர் .