“நீ ஏன் தினேஷ் கார்த்திக்குக்கு பந்து வீசற? நீ போய் ப்ராக்டிஸ் பண்ணு” – 2004 தோனி ஆகாஷ் சோப்ராவுக்கு சொன்ன மாஸ் பதில்!

0
6003
Dhoni

இந்திய கிரிக்கெட் அணியில் 18 ஆண்டுகளாக அவ்வப்போது வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஒரே வீரராக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்!

2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றவர், அடுத்து மீண்டும் 2022 டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

இப்படி இடையில் முக்கியமான தொடர்களுக்கு அணிக்குத் திரும்பிய வீரராக கிரிக்கெட் உலகில் தினேஷ் கார்த்திக் மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் அவர் தம்முடைய வாய்ப்புகளைப் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது சோகம்.

ஆனால் ஆரம்பத்தில் இந்திய அணிக்கான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக முன்னணியில் இருந்தவர் தினேஷ் கார்த்திக். அவருக்குப் பின்வந்த மகேந்திர சிங் தோனி அவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்தார்.

தற்பொழுது இதுபற்றி 2004ல் நடந்த ஒரு சம்பவத்தை பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா
“அது 2004 அப்பொழுது இந்திய ஏ அணி மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தது. அப்பொழுது தோனி ரிசர்வ் வீரராக இருந்தார். விளையாடும் அணியில் தினேஷ் கார்த்திக்தான் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தார்.

- Advertisement -

ஒருமுறை தோனி வலைப்பயிற்சியில் தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கு பந்து வீசிக்கொண்டு இருந்தார். நான் அப்போது அவரிடம் இவர்தான் உங்களுக்குப் போட்டியானவர், இவர் சரியாக விளையாடினால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது, இப்படி இருக்கும் பொழுது நீங்கள் பேட்டிங் இல்லை விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்ய வேண்டும், பந்து வீசக்கூடாது என்று சொன்னேன்.

அதற்கு தோனி என்னிடம், என்னை பந்து வீச தடுக்காதீர்கள். நீங்கள் வந்து பேட்டிங் செய்வதாக இருந்தாலும் நான் உங்களுக்குப் பந்து வீசுவேன் என்று கூறினார்.

நான் அந்த நிகழ்வை திரும்பி பார்க்கும் பொழுது அதன் அர்த்தத்தை உணர்ந்தேன். ஏன் அவரால் மட்டும் சாதிக்க முடிந்தது என்று புரிந்தது. தோனி தினேஷ் கார்த்திகேயோ அல்லது யாரையோ எதிர்த்து போட்டியிடவில்லை.
அவர் தனக்குத்தானே போட்டியிட்டார். எப்பொழுதும் நீங்கள் உங்களுடன் போட்டியிடக் கூடியவராக இருங்கள்!” என்று கூறியிருக்கிறார்!