“கோலி ரோகித் மைதானத்தில் ஆரத்தி எடுக்கறாங்களா?.. உங்களுக்கு கிரிக்கெட்டை விட மதம்தான் முக்கியம்!” – டேனிஷ் கனேரியா கடுமையான தாக்கு!

0
1361
Rizwan

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டியில், இந்திய ரசிகர்கள் சார்பில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன் காரணமாக இந்தியாவிற்குள் இருந்து அதற்கு ஆதரவு எதிர்ப்பு என்று இருவிதமான விமர்சனங்களும் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன.

- Advertisement -

இந்த நிலையில் ஏற்கனவே முகமது ரிஸ்வான் மைதானத்தில் தொழுகை நடத்துவது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து மேற்கொண்டு அவர் விளக்கமாக பேசும் பொழுது “தற்போதைய பாகிஸ்தான அணிக்கு மதம்தான் முக்கியமானது.ஏனென்றால் அது அரசியல். இங்கு கிரிக்கெட் மூன்றாம் பட்சம்தான். இவர்களின் கோமாளித்தனங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவர்கள் நமாஸ் செய்வதாக இருந்தால் அதை ட்ரெஸ்ஸிங் ரூமில் செய்யட்டும்.

எல்லோருக்கும் முன்னால் அதை செய்ய வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? நாங்களும் பூஜைகள் செய்கிறோம். ஆனால் நாங்கள் மைதானத்தில் ஆரத்தி எடுப்பதில்லை. கோலி, ரோஹித் மைதானத்தில் வழிபாடு செய்வதில்லை. அதேபோல சிராஜ், சமி மைதானத்தில் நமாஸ் செய்வதில்லை. இது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

- Advertisement -

நான் பாகிஸ்தான் அணியில் விளையாடிய பொழுது காலைத் தொழுகைக்காக என்னை எழுப்பிக் கொண்டு இருந்தார்கள். எனக்கு இது தொந்தரவாக இருந்ததால் என்னை எழுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டேன். ஆனால் இன்சமாம் அணியில் இல்லாத பொழுது, இந்த நிலைமை மோசம் அடைந்தது.

நான் இஸ்லாம் மதத்திற்கு மாற சம்மதித்திருந்தால், எனக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும், நான் பலரது சாதனைகளை முறியடித்திருப்பேன்.

இந்தியாவில் அனைத்து சமுதாயத்தினரும் நிம்மதியாக வாழ்கிறார்கள். முகமது சமி ட்ரோல் செய்யப்பட்ட பொழுது, அவருக்கு ஆதரவாக முதலில் வந்தது விராட் கோலிதான்.

நான் விளையாடிய காலங்களில் இப்படி எதையும் பார்த்ததில்லை. எனக்காக எந்த பாகிஸ்தான் வீரரும் இப்படியான அறிக்கைகள் வெளியிட்டது கிடையாது. இந்தியாவில் அனைவருமே சமமாகதான் நடத்தப்படுகிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!