“நாங்க பயப்படறோமா? பாஸ் போட்டிய எங்க வச்சாலும் பாகிஸ்தான ஜெயிப்போம்” – ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் தரப்புக்கு பதிலடி!

0
593
Harbhajan

தற்பொழுது நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு, அணிகள் தயாராவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கணித்திருந்தார்கள்!

குறிப்பாக இந்த ஆசியக் கோப்பை தொடர் வீரர்களின் காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு உலக கோப்பைக்கு முன்பாக மிகப்பெரிய பரிசோதனை களமாக அமையும். எனவே நடப்பு ஆசியக்கோப்பைத் தொடர் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மிக இன்றியமையாதது!

- Advertisement -

இந்த முறை ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமம் பாகிஸ்தான் நாட்டிற்கு இருந்தது. ஆனால் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தமது அணியை அனுப்ப மறுத்துவிட்டது. இந்திய அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இரண்டும் கலந்து பேசி இறுதியாக பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து போட்டிகளை நடத்துவதாக முடிவு செய்தன. இந்த இடத்தில்தான் பிரச்சனை ஆரம்பித்தது.

பாகிஸ்தான் தரப்பில் துபாயில் வைத்து நடத்த கேட்டதாகவும், ஆனால் அங்கு வெயில் என்று காரணம் கூறிவிட்டு, இலங்கையில் மழை பெய்யும் என்ற முன்னறிவிப்பு இருந்தும் கூட, இந்திய கிரிக்கெட் வாரியம் குறிப்பாக ஜெய் ஷா இலங்கையில் நடத்தவே ஆர்வம் காட்டினார் என்றும், பாகிஸ்தானுடன் தோல்வியில் இருந்து தப்பிக்கவே இப்படி இந்தியா செய்தது என்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் சேர்மன் நஜாம் சேத்தி கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் தற்பொழுது இலங்கையில் வைத்து நடத்தப்பட்டு, மழையால் போட்டிகள் கைவிடப்பட்டு வருவதால், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு வீரர்களின் உடல் தகுதி குறித்து தெளிவான பார்வை இன்னும் கிடைக்கவில்லை. மேலும் நீண்ட நாட்கள் விளையாடாத வீரர்களுக்கு போட்டி பயிற்சியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் சேர்மனின் கருத்துக்கு பதில் அளித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் “ஒவ்வொரு முறை அவர்களுக்கு எதிராக விளையாடிய போது, அவர்களை அதிக முறை இந்தியாவில் இருப்பதற்கான புள்ளி விவரங்களை அவருக்கு யாராவது கொடுங்கள். இது முதலில் அடிப்படை அற்ற ஒரு சிந்தனை. இவருடைய பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் அந்தஸ்தைதான் காட்டும்.

அவர் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட விரும்பவில்லை ஏனென்றால் இந்தியா பயப்படுகிறது என்று கூறியிருக்கிறார். இந்தியா யாருடன் விளையாடவும் பயப்பட கிடையாது. இதெல்லாம் எங்கிருந்து கிளம்புகிறது? உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் அமர்ந்து பேசுங்கள்.

வானிலை முன்னறிவிப்பு சரியாக இருந்ததோ இல்லையோ அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பாஸ் எங்களோடு எங்கு வேண்டுமானாலும் விளையாட வாங்க, நாங்க பாகிஸ்தான ஜெயிச்சு காட்டுகிறோம்!” என்று ஹர்பஜன் சிங் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்!