யாரும் இந்த இந்திய பவுலரை ஒரு பொருட்டாகவே எடுக்க மாட்டார்கள். அவர் ஒரு சாதாரண பவுலர் – பாகிஸ்தான் வீரர் சர்ச்சை பேச்சு!

0
695
Aqip Javed

இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வந்தபிறகு இந்திய அணிக்குள் பல மாற்றங்கள் நடந்திருக்கிறது. குறிப்பாக இந்திய டி20 அணிக்கு முதலில் பேட்டிங் செய்து சரியான இலக்கை நிர்ணயிப்பது பிரச்சனையாக இருந்தது. தைரியமாக ஆடாமல் இருந்தார்கள். ஆனால் ரோஹித் கேப்டன் பதவிக்கு வந்தபிறகு பவர் பிளே ஸ்கோரும், அணியின் ஸ்கோரும் உயர்ந்திருக்கிறது.

இது மட்டுமே அல்லாமல் அணிக்குள் புதிய வீரர்கள் மற்றுமின்றி அனுபவ வீரர்களான தினேஷ் கார்த்திக் அஸ்வின் போன்றவர்களும் வந்திருக்கிறார்கள். மேலும் பேட்டிங், பந்து வீச்சில் புதிய கூட்டணிகளை விளையாட வைத்து பரிசோதித்து பார்க்கப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து கிடைத்த முடிவுகளை எடுத்துக்கொண்டு, அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கு பயணிப்பதுதான் ரோகித்-டிராவிட் கூட்டணியின் நோக்கமாக இருக்கிறது!

இந்தக் கூட்டணியின் ஒரு பரிசோதனை முயற்சியாக ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக கடந்த இரண்டு வருடங்களாக, இறுதிக் கட்ட ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த பஞ்சாப்பை சேர்ந்த 22 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் அணிக்குள் கொண்டு வரப்பட்டு, ஜூலை மாதம் இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்.

இதுவரை 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் இந்த இளம் இடதுகை பந்துவீச்சாளர், இங்கிருந்து நேராக டி20 உலகக்கோப்பை விளையாட ஆஸ்திரேலியாவிற்கு விமானத்தில் தன் இருக்கையை முன்பதிவு செய்து இருக்கிறார். ஆனால் இந்த ஆசியக் கோப்பை தொடரில் இவரது செயல்பாடு கொஞ்சம் பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவர் முக்கியமான நேரத்தில் ஒரு முக்கியமான கேட்சை தவறவிட்டு சொந்த நாட்டு ரசிகர்களாலே பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்த நிலையில் இவரது பந்து வீச்சு குறித்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வேகப்பந்துவீச்சாளர் அக்குப் ஜாவித் மிகுந்த குறைவான மதிப்பை கொண்டிருக்கிறார். அர்ஸ்தீப்பை ஒரு பவுலர் ஆக எந்த அணிகளும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது “அர்ஸ்தீப் ஒரு சாதாரண அடிப்படை பவுலர். டி20 போட்டிகளில் புவனேஸ்வர் குமார் போன்று உங்களுக்கு ஸ்விங் செய்யும் பவுலர் வேண்டும். இல்லையென்றால் வேகமாக வீசும் பவுலர் வேண்டும். நல்ல பவுன்சர்களை வீசுவதற்கு உயரமாக இருக்க வேண்டும். உங்களிடம் இப்படி தனிப்பட்ட ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். உலகெங்கும் உள்ள பந்துவீச்சாளர்களை கவனியுங்கள் நீங்கள் அவர்களிடம் இதைப் பார்க்க முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் “உதாரணமாக பும்ரா யார்க்கர் பந்துகளை மிகச்சிறப்பாக வீசுகிறார். ஹர்திக் பாண்டியாவின் பவுன்சர் பந்துகள் ஆபத்தானது. ஷாகின் அபாரமான ஸ்விங் மற்றும் ஹாரிஸ் ரவுப் அபாரமான வேகம் என கொண்டவர்கள். அர்ஸ்தீப் இடம் மற்ற பந்துவீச்சாளர்களை போல சிறப்பான எந்த ஒன்றும் கிடையாது. அவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளரைப் பற்றி எந்த அணிகளும் நினைக்கவே நினைக்காது ” என்று கூறியிருக்கிறார்!