அந்த சின்ன பையன் வாழ்க்கை தான் வீணாகப்போகிறது, கேஎல் ராகுல் எவ்ளோ மோசமா ஆடினாலும் பிளேயிங் லெவன்ல இருப்பாரு- முன்னாள் வீரர் கருத்து!

0
341

எவ்வளவு மோசமாக ஆடினாலும் கே எல் ராகுல் பிளேயிங் லெவனில் தான் இருக்கப் போகிறார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.

வங்கதேசம் அணியுடன் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 500 ரன்களுக்கும் அதிகமான இலக்கை நிர்ணயித்து வலுவான நிலையில் இருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் சுப்மன் கில் அபாரமாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ச்சியாக நன்றாக விளையாடு வருகிறார்.

ரோகித் சர்மா இல்லாததால் கேஎல் ராகுல் மற்றும் சுப்மன் கில் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கி வருகின்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்புகிறார் என்று தகவல்கள் வந்திருக்கிறது.

அவர் அணிக்கு திரும்பி விட்டால், யார் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்குவார்? என்ற கேள்விகள் தொடர்ந்து நிலவி வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 22 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 23 ரன்கள் என கே எல் ராகுல் சரியாக விளையாடவில்லை.

இருப்பினும் ரோகித் சர்மா வந்து விட்டால் கே எல் ராகுல் தான் அவருடன் துவக்க வீரராக களமிறங்குவார். சுப்மன் கில் வெளியில் அமர்த்தப்படுவார் என்று கடுமையாக கருத்து தெரிவித்திருக்கிறார் சஞ்சய் மஞ்சுரேக்கர். அவர் பேசியதாவது:

“இந்த பையன் சதம் அடித்திருக்கிறார். நன்றாகவும் விளையாடி வருகிறார். நல்ல பார்மில் இருக்கிறார். ரோகித் சர்மா மீண்டும் அணைக்கு திரும்பி விட்டால் கே எல் ராகுல் முதன்மை துவக்க வீரராக இருக்கிறார். ரோகித் சர்மாவுடன் அவர்தான் துவக்க வீரராக களம் இறங்குவார்.

எதிர்பார்த்த ரன்களை கேஎல் ராகுல் அடிக்க வில்லை. ஆனால் கேஎல் ராகுலை வெளியில் உட்கார வைக்கமாட்டார்கள். சதம் அடித்த கில் தான் வெளியில் அமர்த்தப்படுவார்.

அஜிங்கிய ரகானே துணை கேப்டனாக இருந்தபோது கேஎல் ராகுல் நன்றாக விளையாடி வந்தார். ரகானே சற்று மோசமாக விளையாடி வந்தார். ஆனால் அந்த சமயத்தில் ரகானே அணியில் எடுக்கப்பட்டார். இது போன்ற எண்ணற்ற உதாரணங்கள் இந்திய அணியில் இருந்து கொடுக்கலாம்.

என்னை பொறுத்தவரை, நன்றாக விளையாடி வரும் அந்தப் பையனை நிறைய வாய்ப்புகள் கொடுத்து பயன்படுத்துங்கள். வெளியில் அமர்த்தி நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டாம். எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல.” என கருத்து தெரிவித்திருக்கிறார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.