பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு மேலும் ஒரு வீரர் காயம். புதிய வீரர் சேர்ப்பு!

0
163
Pakistan

தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு 22 வயதான இடக்கை வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி மிக முக்கியமான வீரராக இருந்து வருகிறார். அவரது அதிரடியான சுவிங் வேகப்பந்து வீச்சு எதிரொலி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் பாபர் ஆசம் எப்படியோ பவுலிங்கில் பாகிஸ்தானுக்கு இவர் அப்படி.

ஆனால் ஆசிய கோப்பைக்கு முன்பாக நெதர்லாந்து சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடிய போது அங்கு முழங்காலில் ஷாகின் ஷா அப்ரிடி காயமடைந்தார். அவர் அந்தத் தொடரில் இருந்து வெளியேறியதோடு ஆசிய கோப்பையில் இருந்தும் வெளியேறினார். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் கேட்டுக் கொண்டதற்காக அவர் தற்போது அணியோடு துபாயில் இருந்து வருகிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியை எடுத்துக்கொண்டால் பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் வரும் முதல் மூன்று வீரர்கள் மட்டுமே பலமாக இருக்கிறார்கள். பந்துவீச்சு என்று எடுத்துக்கொண்டால் பாகிஸ்தான் அணி பெரிய அளவில் பின்தங்கியே இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக இருபத்தி ஒரு வயதான வலக்கை வேகப்பந்துவீச்சாளர் முகமது வாசிம் காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். தற்போது அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என்று தெரியவந்திருக்கிறது.

தற்பொழுது இவருக்குப் பதிலாக அணியின் சீனியர் வீரரான அசன் அலி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நெதர்லாந்து தொடருக்கு அசன் அலி தேர்வு ஆகாத பொழுது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ” அசன் அலி பார்மில் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர் எதையும் நிரூபிக்க வேண்டும் என்று கிடையாது. அவர் ஒரு டீம் மேன். அடுத்து உள்நாட்டு போட்டிகள் வர இருக்கிறது. அதில் அவர் விளையாடி மீண்டும் அணிக்குள் வருவார்” என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அசன் அலி கடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியோடு மேத்யூ வேடின் மிக முக்கியமான கேட்சை தவறவிட்டு, இதுதான் அணி தொடரில் இருந்து வெளியேற ஒரு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவர் பாகிஸ்தான் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.