இந்த வருட ஐபிஎல் இல் அறிமுகமாகிறது மேலும் ஒரு புதிய விதி !

0
420

இந்திய பிரிமியர் லீக் எனப்படும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் வருகின்ற 31ம் தேதி முதல் துவங்கி 28 மே 2023 வரை நடைபெற இருக்கிறது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல்-ன் முதல் போட்டி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குமிடையே வருகின்ற மார்ச் 31ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் துவங்கயிருக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர்கள் முதல் இம்பேக்ட் பிளேயர் எனப்படும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்று வீரரை அறிமுகப்படுத்தும் முறையை கொண்டு வந்திருக்கிறது பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம். இந்த புதிய விதிகளின்படி ஆடும் 11 வீரர்களோடு மாற்று வீரராக ஒரு பந்துவீச்சாளரையோ அல்லது பேட்ஸ்மேன் அல்லது ஒரு ஆல் ரவுண்டரையோ ஒரு அணியால் தேர்வு செய்ய முடியும். இந்த மாற்று வீரர் அணியில் இடம் பெற்றிருக்கும் 11 வீரர்களில் ஒருவருக்கு பதிலாக இறங்கி போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரரை ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவர் முதல் 14வது ஓவருக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஐபிஎல் விதி வகுத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல்-ன் விதிமுறைகளில் மேலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி அணியானது விளையாடப் போகும் பதினோரு வீரர்கள் மற்றும் இம்பேக்ட் பிளேயர் ஆகியோரை டாசீருக்கு பிறகு அறிவிக்கலாம் என்பதுதான். இதற்கு முன்பு ஆட்ட விதிகளின்படி ஒரு அணி நாணய துண்டுதலுக்கு முன்பாக ஆடக்கூடிய 11 வீரர்களை அறிவித்திருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டிலும் இதுதான் விதியாக இருக்கிறது.

ஆனால் இந்த வருட ஐபிஎல் முதல் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அந்த விதிமுறைகளின் படி காசிற்கு பின்பே வீரர்களை அறிவித்துக் கொள்ளலாம். அணியில் இடம்பெறக்கூடிய 11 வீரர்களையும் மற்றும் இம்பேக்ட் ப்ளேயரையும் டாசீருக்கு பின்பு அறிவிக்கலாம் என்பதுதான். இந்த புதிய விதியின் மூலம் போட்டியில் நிறைய தாக்கங்கள் ஏற்படலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். டாஸில் வெற்றி பெற்ற ஒரு அணி பேட்டிங் செய்கிறதா? அல்லது பீல்டிங் செய்கிறதா என்பதை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் அணிக்கு தேவையான மாற்றங்களை செய்வதற்கு இது ஒரு நல்ல திட்டமிடலை அணிகளுக்கு கொடுக்கும் என கிரிக்கெட் விமர்சிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -