மூன்றாவது நடுவரின் சர்ச்சையான தீர்ப்பு அதிருப்தியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் – வீடியோ லிங்க் உள்ளே!

0
205

தென் ஆப்பிரிக்கா அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது . மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது . இந்த டெஸ்ட் போட்டியை கைப்பற்றுவதன் மூலம் ஆஸ்திரேலியா அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுவிடும் . ஆனால் தென் ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்திற்கு செல்வதற்கான குறைந்தபட்ச வாய்ப்பையாவது தக்கவைத்துக் கொள்ள முடியும் .

டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சென்ற போட்டியில் காயமடைந்த கேமரூன் கிரீனுக்கு பதிலாக மேட் ரன்ஷாவும் மிட்செல் ஸ்டார்க் பதிலாக ஆஸ்டன் ஏகரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.சென்ற போட்டியில் சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் 4 வது ஓவரிலேயே 10 ரன்களுக்கு நோர்க்யா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் . இதனைத் தொடர்ந்து உஸ்மான் குவாஜாவும் மார்னஸ் லபுசேனும் இரண்டாவது விக்கெட்டுக்கு அருமையாக ஆடினர் .

சிறப்பாக ஆடிய லபுசேன் அரை சதம் அடித்தார் . அவருக்கு துணையாக நின்று ஆடிய உஸ்மான் குவாஜா நிதானமாக ஆடி தனது அரை சதத்தை பதிவு செய்தார் . இந்தத் தொடரில் அவர் அடிக்கும் முதல் அரை சதம் இதுவாகும் . முதல் விக்கெட் பிறகு தென் ஆப்பிரிக்கா
பந்துவீச்சாளர்களால் இரண்டாவது விக்கெட் வீழ்த்த முடியவில்லை. உணவு இடைவெளிக்கு பின் ஆட்டமானது மழையின் காரணமாக சிறிது நேரம் தடைப்பட்டது .

அதற்குப் பின் தொடர்ந்த ஆட்டத்தில் மார்னஸ் லபுசேன்,மேக்ரோ யான்சன் வீசிய பந்துவீச்சில் ஹார்மாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் . அந்த கேட்சானது சரியாக பிடிக்கப்படவில்லை என்று மூன்றாவது நடுவரின் தீர்ப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டது . பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த மூன்றாவது நடுவர் பந்து தரையில் பட்டதாக கருதி அவுட் இல்லை என்று அறிவித்தார்.

இது தென் ஆப்பிரிக்கா வீரர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் கள நடுவர்களிடம் சென்று முறையிட்டனர் . ஆனால் மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்ததால் அந்த முடிவே தொடரும் என கள நடுவர்கள் தெரிவித்தனர்.இதனால் 70 ரன்களில் ஆட்டம் இழப்பதில் இருந்து தப்பித்தார் லபுசேன். தொடர்ந்து ஆடிய அவர் நோர்க்யா பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார் . தேநீர் இடைவேளைக்குப் பிறகு போதுமான வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் ஆனது முடிவுக்கு வந்தது . ஆட்ட நேர இறுதியில் உஸ்மான் குவாஜா 54 ரன்கள்டனும் ஸ்டீவன் ஸ்மித் ரண்கள் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர் . ஆஸ்திரேலியா அணி 147 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது . சர்ச்சைக்குரிய அந்த கேட்சின் வீடியோவானது இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் பேஸ் லீகில் இதே போன்ற ஒரு கேட்ச் மூன்றாவது நடுவரின் தீர்ப்புக்கு சென்று சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது