இந்திய கிரிக்கெட்

ஆர்சிபிக்கு ஏலத்துல இதுதான் முக்கிய வேலை.. அந்த 2 வீரர்களை வாங்கினா முடிந்தது – அனில் கும்ப்ளே கருத்து

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் ஆர்சிபி அணிக்கு முக்கிய தேவை என்ன என்பது குறித்து அனில் கும்ப்ளே தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது அவர்களிடம் வலிமையான பிளேயிங் லெவன் இருக்கிறது. அதே சமயத்தில் 16 கோடி பணமும் இருக்கிறது. இன்னும் அணியை ஆர்சிபியால் பலப்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேஸில்வுட் தரும் பிரச்சனை

இந்த முறை ஐபிஎல் தொடரில் ஆர்சிபி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட் முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் தற்போது அவர் காயத்தின் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆசஸ் தொடரில் முற்றிலுமாக விலகி இருக்கிறார்.

அவர் அடிக்கடி காயத்தில் சிக்கிக் கொள்கின்ற வாய்ப்பில் இருப்பதால் ஆர்சிபி இவருக்கு மாற்று வேகப் பந்துவீச்சாளரை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில் இருக்கிறது. மேலும் இந்தியாவிலிருந்து இளம் ஸ்பின்னர்கள் யாராவது கிடைத்தாலும் வாங்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. இதைத் தாண்டி குறைந்த பணத்திற்கு வெங்கடேஷ் ஐயர் கிடைத்தாலும் வாங்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை.

- Advertisement -

இந்த இரண்டு தேவைகள் உண்டு

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறும்பொழுது ” ஆர் சி பி அணிக்கு வெங்கடேஷ் ஐயர் கிடைத்தால் பெரிய நெகிழ்வுத் தன்மை கிடைக்கும் என்பது உண்மை. ஐபிஎல் தொடரில் அனுபவம் கொண்ட இந்திய வீரர்கள் கிடைப்பது மிகவும் கடினம். அவர் முதல் இடத்தில் இருந்து ஐந்தாம் இடம் வரையில் பேட்டிங் செய்ய முடியும். ஆனால் அவர்கள் கையில் இருப்பது 16 கோடிதான். எனவே ஏலம் எப்படி செல்கிறது என்பதை பொறுத்து தான் இவர் கிடைப்பாரா இல்லையா என்பது தெரியும்”

இதையும் படிங்க : சிஎஸ்கே இந்த இந்திய பையனை வாங்குங்க.. குறைந்த விலையில பேட்டிங்ல மாஸ் பண்ணுவாரு – சுரேஷ் ரெய்னா

“ஹேசில்வுட் இடத்திற்கு பேக்கப்பாக இப்பொழுது அவர்களுக்கு ஒரு இந்திய வேகப் பந்துவீச்சாளர் தேவை. மேலும் அவர்களுக்கு சுயாஸ் சர்மா மற்றும் க்ருனால் பாண்டியா இருவருக்கும் சேர்த்து ஒரு பேக்கப் இந்திய ஸ்பின்னர் தேவை. அவர்களுக்கு ஏலத்தில் இதுதான் மிகவும் முன்னுரிமையாக இருக்கிறது. எனவே அவர்கள் முதலில் இதற்குதான் செல்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by