ஏபி டி வில்லியர்ஸ்-க்கு இடமில்லை; ஆல்-டைம் சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த லெஜெண்ட் அனில் கும்ப்ளே!

0
179

ஆல்-டைம் சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார் லெஜெண்ட் அனில் கும்ப்ளே.

வருகிற மார்ச் மாதம் ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது. கடந்த இரண்டு வருடங்கள் குறிப்பிட்ட சில மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த வருடம் இதற்கு முன்பு நடந்ததை போல சொந்த மைதானத்தில் ஒரு போட்டி, வெளி மைதானத்தில் ஒரு போட்டி என்கிற வகையில் மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட உள்ளது என பிசிசிஐ அறிவித்ததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இந்த வருடம் ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில் நன்றாக செயல்பட்டால் மட்டுமே இவர்களால் மீண்டும் இந்திய டி20 அணிக்குள் இடம்பிடிக்க முடியும். 2024 ஆம் ஆண்டு வரவிருக்கும் டி20 உலக கோப்பையில் விளையாடவும் முடியும்.

அதேபோல் மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடர் என பேசப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடர்களில் சிறப்பான வரலாறு வைத்திருக்கும் தோனி, வெற்றியுடன் முடிப்பதற்கு முனைப்புடன் இருப்பார் என்று எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இதுவரை 15 ஐபிஎல் சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இவை அனைத்தையும் வைத்து சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே. அவர் அறிவித்த இந்த அணியில் ஆர்சிபி லெஜெண்ட் ஏபி டி வில்லியர்ஸ் இடம்பெறவில்லை. இது குறித்து பதில் அளித்த அவர்,

- Advertisement -

“என்னுடைய அணியின் ஐந்தாவது இடத்தில் மகேந்திர சிங் தோனி இருக்கிறார். அவரை தவிர வேறு எந்த வீரரையும் என்னால் அந்த இடத்தில் பார்க்க முடியாது. விக்கெட் கீப்பராகவும் அவர் இருப்பதால் நிச்சயம் வேறு வீரருக்கு அந்த இடம் கிடையாது. ஆறாவது இடத்தில் பொல்லார்ட் இருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் ஹர்திக் பாண்டியா கட்டாயம் இருக்கிறார். அவர் ஒரு ஐபிஎல் கோப்பையை வைத்திருக்கிறார். இதன் காரணமாக டிவில்லியர்ஸ் எனது அணியில் எடுக்கப்படவில்லை.” என்று கூறினார்.

அனில் கும்ப்ளே தேர்வு செய்துள்ள ஆல்-டைம் ஐபிஎல் லெவன்:

கிறிஸ் கெயில், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, எம்எஸ் தோனி, ஆண்ட்ரெ ரசல், ஹர்திக் பாண்டியா, சுனில் நரேன், யுஸ்வேந்திர சகல், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா.