இந்த பையன பத்திரமா பத்துக்கோங்க, ஜாகீர்கான் மாதிரி டாப்ல வருவான் – இளம் வீரருக்கு அனில் கும்ப்ளே ஆதரவு!

0
1132

ஜாகிர் கானை போல மிகச் சிறப்பாக இந்திய அணியில் வலம் வருவார் அர்ஷதீப் சிங் என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார் அனில் கும்ப்ளே.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு வந்ததால், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்சதிப் சிங் கடந்த ஜூலை மாதம் இந்திய டி20 அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆசிய கோப்பை தொடரில் ஒரு சில தவறுகளை செய்திருந்தாலும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால், டி20 உலக கோப்பை அணியில் இடம் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

தனக்கு கொடுக்கப்பட்ட இடத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பந்துவீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே நம்பர் ஒன் வீரர் பாபர் அசாமை விக்கெட் எடுத்து எதிரணிக்கு திணறலை ஏற்படுத்தினார். அடுத்த ஓவரில் நல்ல ஃபார்மில் இருந்த முகமது ரிஸ்வானை வீழ்த்தி மேலும் பந்துவீச்சில் ஆதிக்கத்தை செலுத்தி வந்தார்.

4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்த அர்சதீப் சிங், இளம் வீரரை போல அல்லாமல் நல்ல அனுபவம் பெற்ற வீரரை போல பந்து வீசினார் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அர்சதீப் போன்ற வீரரை இந்திய அணியில் பாதுகாக்க வேண்டும்; ஜாகிர் கான் போல பங்களிப்பை கொடுப்பார் என்று அவருடன் ஐபிஎல் தொடரில் பணியாற்றிய முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே கருத்து தெரிவித்திருக்கிறார்.

“தற்போது அர்சதீப் சிங் இருக்கும் இடம் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மூன்று ஆண்டுகள் அவருடன் ஐபிஎல் போட்டிகளில் பணியாற்றியுள்ளேன். அவரது வளர்ச்சியை கண்கூட கண்டிருக்கிறேன். குறிப்பாக டி20 போட்டிகளில் வெகுவாக தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரை அதற்கு சான்றாக கூறலாம்.

- Advertisement -

இளம்வீரரைப் போல அல்லாமல் அவரது பந்து வீச்சில் முதிர்ச்சி காணப்படுகிறது. அதை அவர் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை பொருத்தவரை ஜாகிர் கான் இந்திய அணிக்கு கொடுத்த பங்களிப்பை போல, இவரும் மிகச் சிறந்த பங்களிப்பை கொடுப்பார் என்று நினைக்கிறேன்.” என்றார்.