பஞ்சாப் அணியை சிக்ஸர்களால் நொறுக்கிய கொல்கத்தா ஆல்ரவுண்டர் ; ஐ.பி.எல் வரலாற்றில் புதிய மைல்கல்லை அடைந்துள்ள ஆண்ட்ரே ரஸல்

0
272
Andre Russell

2022 ஐ.பி.எல் 15-வது சீசனின் எட்டாவது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஷ் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்த்து, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி விளையாடியது!

டாஸில் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் பஞ்சாப்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். ஆனால் ஆட்டத்தைத் துவங்க தந்த கேப்டன் மயங்க் அகர்வால் 1 ரன்னில் வெளியேற, மொத்த பஞ்சாப் அணியும் 137 ரன்களுக்குள் சுருண்டது. பனுகா ராஜபக்சே 9 பந்துகளில் 31 ரன் அடித்து மிரட்டினாலும் பயன் இல்லை. கொல்கத்தா தரப்பில் உமேஷ் மிகச்சிறப்பாக பந்துவீசி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்பு 138 என்ற எளிய இலக்கை துரத்த ஆரம்பித்த கொல்கத்தா அணியும் ஆரம்பத்தில் 9 ஓவரில் 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் விழுந்தது. ஆனால் அப்போது களமிறங்கிய அதிரடி மன்னன் ரஸல் தனியாளாய் மொத்த நெருக்கடியையும் தூள் தூளாக உடைத்துவிட்டார்.

ஆட்டத்தில் ஹர்ப்ரீத் வீசிய பத்தாவது ஓவரில் 17 ரன்களையும், ஓடியன் ஸ்மித் வீசிய 12வது ஓவரில் 30 ரன்களைம் கொண்டுவர முக்கியக் காரணமாக இருந்த ரஸல், லிவிங்ஸ்டனின் 15 ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து 31 பந்துகளில் 70 ரன்களோடு கொல்கத்தாவை எளிமையாய் வெற்றிபெற வைத்தார்.

இந்த ஆட்டத்தில் 8 சிக்ஸர்களை அடித்ததின் மூலம் ரஸல் 72 ஐ.பி.எல் ஆட்டங்களில் 150 சிக்ஸர் அடித்தவராகிறார்!