அமெரிக்கா வெஸ்ட் இண்டீஸ்.. தனித்தனி பிளான் போட்ட ரோகித் டிராவிட்.. இந்தியா கப் அடிக்கும் போலயே

0
32
Rohit

தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரு நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு நாடுகளும் வேறு வேறு ஆன சூழ்நிலைகளைக் கொண்டிருக்கின்றன. இதற்கு தற்போது இந்திய அணி நிர்வாகம் சிறப்பான திட்டத்தை தீட்டி வைத்திருக்கிறது.

இந்திய அணி தனது முதல் சுற்றில் போட்டிகளை முழுவதுமாக அமெரிக்காவில் வைத்து விளையாடுகிறது. மேற்கொண்டு இரண்டாவது சுற்றுக்கு தகுதி வரும் பொழுது விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டிஸ் செல்கிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்கு இந்திய அணியின் பெரிய ரசிகர் கூட்டத்தை ஐசிசி பயன்படுத்துகிறது.

- Advertisement -

இந்த நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய தேர்வுக்குழு நான்கு சுழல் பந்துவீச்சாளர்களைக் கொண்ட அணியை தேர்ந்தெடுத்தது. மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தார்கள். அதே சமயத்தில் இரண்டு மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை அணியில் சேர்த்தார்கள்.

இந்த நிலையில் அமெரிக்க சூழ்நிலைகள் குறிப்பாக இந்தியா மூன்று போட்டிகளை விளையாடும் நியூயார்க் மைதான சூழ்நிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. எனவே இந்திய அணி நிர்வாகம் மூன்று முழுமையான வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துகிறது.

அதே சமயத்தில் பேட்டிங் வரிசையை எட்டு வரை கொண்டு வருவதற்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என இருவரையுமே அணிக்குள் வைக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் குல்தீப் யாதவை வெளியில் வைத்தது. இந்த நகர்வு எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தாலும் நல்ல நகர்வாகவே இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக இருக்க.. இந்த இந்திய வீரருக்கு மட்டுமே தகுதி இருக்கு.. மேத்யூ ஹெய்டன் பேட்டி

மேலும் இரண்டாவது சுற்றுக்கு செல்லும் பொழுது வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சுக்கு மற்றும் மிதவேக பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே இங்கு விளையாடும் பொழுது முகமது சிராஜை வெளியில் வைத்து, அவருடைய இடத்தில் குல்தீப் யாதவை விளையாட வைக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த வகையில் பார்க்கும் பொழுது இந்திய அணி மிகவும் வலிமையாக இருக்கிறது. எனவே இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது என்று கருதப்படுகிறது!