சஞ்சு சாம்சனுக்கு பதிலாக எதிர்பார்க்காத புதிய இளம் விக்கெட் கீப்பர் சேர்ப்பு!

0
3830
Samson

இந்திய அணி தற்போது உள்நாட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது!

இந்த தொடரின் முதல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் டாசில் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 162 ரன்கள் சேர்த்தது.

அடுத்து விளையாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்பு கேப்டன் சனகாவின் அதிரடி ஆட்டத்தில் இந்தியா அணிக்கு அச்சுறுத்தலை தந்து கடைசியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்தின் போது ஃபீல்டிங் செய்கையில் கால் முட்டி மைதானத்தில் மோதி சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தற்பொழுது டி20 தொடரை விட்டு வெளியேறுகிறார். வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கிடைத்த வாய்ப்பும் இப்படி அவருக்கு பரிபோனது சோகமே!

இந்த நிலையில் அவருக்கு பதிலாக விதர்பா அணிக்காக விளையாடும் விக்கெட் கீப்பிங் வலது கை பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டு அணியுடன் இணைகிறார்.

இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் அணியால் இருபது லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டு, யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிரடியாக பஞ்சாப் அணிக்கு ரன்கள் சேர்த்தார். கடந்த ஐபிஎல் தொடரில் இவர் மொத்தம் 12 ஆட்டங்களில் 10 ஆட்டங்கள் பேட்டிங் செய்து அதில் இரண்டு ஆட்டங்கள் நாட் அவுட் ஆக இருந்து, 234 ரன்களை, 29.25 சராசரியில், மிகச் சிறப்பான 163.64 ஸ்ட்ரைக் ரைட்டில் அடித்திருந்தார். தற்பொழுது சஞ்சு சாம்சனின் இன் காயம் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பை பெற்று தந்திருக்கிறது!