ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ட்விட்டரில் ட்வீட் செய்து ஒரு சில நிமிடங்களில் அதை டெலிட் செய்த அம்பத்தி ராயுடு – ட்விட் இணைப்பு

0
168

ஐபிஎல் தொடரில் அம்பத்தி ராயுடு 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை விளையாடிக் கொண்டிருக்கிறார். 2010 முதல் 2017ஆம் ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி கொண்டிருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2013ம் ஆண்டு, 2015ஆம் ஆண்டு மற்றும் 2017ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை இவர் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற, இவரது பேட்டிங் அந்த அணிக்கு நிறைய இடத்தில் கை கொடுத்தது.

அதேபோன்று 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சென்னை அணியில் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு இவருடைய கேரியரில் இவருக்கு சிறந்த ஐபிஎல் சீசனாக அமைந்தது. அந்த சீசனில் மொத்தமாக 602 ரன்கள் இவர் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுடன் நான் ஓய்வு பெற்றுக் கொள்கிறேன்

நடப்பு ஐபிஎல் தொடரிலும் சிறப்பான நிலையில் விளையாடிக் கொண்டிருக்கும் அம்பத்தி ராயுடு சற்று முன்னர் தன்னுடைய டுவிட்டர் கணக்கில் ரசிகர்கள் அனைவரின் மனதையும் உடைக்கும் விதத்தில் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

“நடப்பு ஐபிஎல் தொடர் உடன் நான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். இதுவே என்னுடைய கடைசி ஐபிஎல் தொடர். 13 வருடங்களில் இரண்டு சிறந்த அணிகளுக்கு விளையாடிய சந்தோஷமும் பெருமையும் எனக்குள் எப்பொழுதும் இருக்கும். இந்த 13 வருடங்கள் எனக்கு அற்புதமாக கழிந்தது. இந்த நேரத்தில் எனக்கு அற்புதமான பயணத்தை அமைத்துக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று அம்பத்தி ராயுடு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதேபோல அவர் பதிவு செய்த ஒரு சில நிமிடங்களில் அந்த ட்வீட்டை அவர் டெலிட் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் அம்பத்தி ராயுடு :

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிகபட்சமாக 114 போட்டிகளில் விளையாடி 2416 ரன்கள் குவித்துள்ளார். மும்பை அணியில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 27.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 126.16ஆகும். சென்னை அணியில் தற்பொழுது வரை 73 போட்டிகளில் விளையாடி 1771 ரன்கள் சென்னை அணியில் தற்போது வரை இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 32.80 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 128.80ஆகும்.

ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக தற்போது வரை 187 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் தற்போது வரை 4187 ரன்கள் குவித்துள்ளார். அதில் 22 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 29.28 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 127.26.ஆகும்.