நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பாதி ராயுடு, கொல்கத்தா அணி குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ரகானே அதிகபட்சமாக 40 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்கள் குவித்தார். 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் 18 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். மேலும் மும்பை அணி பேட்டிங் செய்தபோது கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பலவீனமாக காணப்பட்டது.
ஆல் ரவுண்டர் என்கிற வகையில் கிரீன் பவுலிங் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஒரு ஓவர் கூட அவர் வீசவில்லை. முடிவில் நம்ப இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்து போட்டி முடிந்த பிறகு ரகானே பேசும்போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை பந்து வீச அனுமதிக்கவில்லை என்கிற வகையில் பேசி இருந்தார். இது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு இது முற்றிலும் முட்டாள்தனமான விஷயம் என்று சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது “இது முற்றிலும் அபத்தமான விஷயமாகும். ஒரு வீரர் போட்டியில் பங்கு பெற வரும்போது அவரால் இதை செய்ய முடியும் இதை செய்ய முடியாது என்று கூறுவது முற்றிலும் முட்டாள்தனமான விஷயம். அதுவும் குறிப்பாக ஒரு தொழில் முறை சூழலில் இது நிகழவே கூடாது. இது அந்த வீரரின் விருப்பத்திற்கு விட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
ஒரு வீரரால் தன்னால் முடிந்ததை செய்யும் பட்சத்தில் அவர் அதை முழுமையாக செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்போதுதான் அவர் ஒரு முழுமையான வீரராக பார்க்கப்படுகிறார். மேலும் கிரீன் அவுட் ஆன விதத்தை பற்றி கூறும் போது அவரால் கவர் டிரைவ் ஆட முடியுமா? முடியாதா என்று கேட்கிறேன். ஒருவேளை அவரது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் இதை செய்ய முடியாமல் போய் இருக்கலாம்” என்று பேசியிருக்கிறார்.