ஐபிஎல் 2025

அம்பதி ராயுடுவை காணவில்லை.. ஆர்சிபி போட்ட பதிவு.. தரமான பதில் கொடுத்த ராயுடு.. ரசிகர்கள் பாராட்டு

சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஆர்சிபி ஆபீஸியல் பக்கத்தில் தன் குறித்து வெளியிடப்பட்டிருந்த பதிவுக்கு மிகவும் தரமான பெருந்தன்மையான பதில் அளித்து இருக்கிறார். மேலும் சிஎஸ்கே அணியின் பலவீனங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

அம்பதி ராயுடு சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடி ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றவர். மேலும் கிரிக்கெட் வர்ணனை மற்றும் சமூக வலைதளத்தில் சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக ஒரு பக்க சார்பாக பேசக்கூடியவர் என்று மற்ற அணி ரசிகர்களால் கருதப்படுபவர். ஆனால் தற்போது அவர் கொடுத்திருக்கும் ஒரு பதிலால் மொத்தத்தையும் மாற்றி இருக்கிறார்.

ஆர்சிபி போட்ட பதிவு

ஐபிஎல் வரலாற்றில் முதல் ஐபிஎல் சீசனில் 2008 ஆம் ஆண்டு ஆர்சிபி அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்து இருந்தது. இதற்கு அடுத்து 17 வருடங்கள் கழித்து தற்பொழுதுதான் மீண்டும் அந்த அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்திருக்கிறது.

இந்த நிலையில் ஆர்சிபி அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் “நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். குழுவில் ஒரு குறிப்பிட்ட உறுப்பினர் இரண்டு மணி நேரமாக ஆன்லைனில் காணவில்லை. இது பற்றி யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். அம்பதி ராயுடு நன்றாக இருக்கிறார் என்று நம்புகிறோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

- Advertisement -

அம்பதி ராயுடு கொடுத்த பதில்

ஆர்சிபி அடியின் இந்த பதிவுக்கு அம்பதி ராயுடு பதில் அளித்த பொழுது “ஹா ஹா ஹா அருமையாக இருக்கிறது. இப்படித்தான் கேலியாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு சிறந்த அணி கிடைத்திருக்கிறது. எனவே நீங்கள் சிறந்தவை எதிர்பார்க்கலாம்” என்று கேலிக்கு பெருந்தன்மையாக பாராட்டி பதில் அளித்து இருக்கிறார்.

இதையும் படிங்க : பிளமிங் தோத்துட்டு பொய்ய சொல்லி இருக்க கூடாது.. இதுதான் உண்மையில நடக்குது – புஜாரா பேச்சு

மேலும் சிஎஸ்கே அணி பற்றி பேசி உள்ள அம்பதி ராயுடு “சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பற்றி எனக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. ருதுராஜ் ஓபனராக வர வேண்டும். ஜடேஜா பேட்டிங் வரிசையில் கொஞ்சம் மேலே போக வேண்டும். மேலும் தோனி பேட்டிங் ஆர்டரில் நிச்சயம் கீழே இருக்கக்கூடாது. இதையெல்லாம் தாண்டி சிஎஸ்கே அணி வீரர்கள் ஸ்பின் விளையாடுவதில் தடுமாறினால் அது மோசமான நிலைமையை உருவாக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by