அம்பத்தி ராயுடு – செல்டன் ஜாக்சன் களத்தில் மோதல் பரபரப்பு ; வீடியோ இணைப்பு!

0
170
SMAT

நேற்று முதல் முப்பத்தி எட்டு இந்திய உள்நாட்டு அணிகளை வைத்து, சையது முஷ்டாக் அலி டி20 லீக் இந்திய ஆறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்திய அணிக்காக விளையாடி உள்ள பிரபல வீரர்கள் மற்றும் ஐபிஎல் தொடரில் பிரகாசித்த இளம் வீரர்கள் என தரமான வீரர்கள் பங்குபெறும் டி20 லீக் இது!

இன்று பரோடா மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதிய ஒரு போட்டி நடைபெற்றது. இதில் பரோடா அணிக்கு பிரபல முன்னாள் இந்திய வீரர் அம்பதி ராயுடு கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். சௌராஷ்ட்ரா அணிக்கு உனட்கட் கேப்டனாக இருக்கிறார்.

இதில் முதலில் பேட் செய்த பரோடா அணி 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் கேப்டன் அம்பத்தி ராயுடு முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். இதற்கு அடுத்து பேட் செய்த சவுராஷ்டிரா அணி இரண்டு பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது.

இதில் சௌராஷ்ட்ரா அணி பேட் செய்யும்பொழுது 9வது ஓவரில் அந்த அணியின் செல்டன் ஜாக்சனுக்கும், பரோடா அணியின் கேப்டன் அம்பதி ராயுடுக்கும் களத்தில் வாய்த் தகராறு முற்றியது. இரு அணி வீரர்களும் தலையிட்டுதான் சண்டையை சமாதானம் செய்து வைத்தார்கள். ஆனாலும்கூட அதற்குப் பிறகும் அம்பதி ராயுடு அம்பயர்கள் இடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

சண்டைக்கான காரணம் என்னவென்று தற்போது தெரியவந்திருக்கிறது. செல்டன் ஜாக்சன் பேட் செய்யும் பொழுது பந்துக்கு பந்து மிகவும் தாமதப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அதிருப்தியடைந்த அம்பத்தி ராயுடு ஏதோ கூற, சண்டையாக மாறி விட்டது. இதற்கான காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது!