இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை அலறவைத்த மிட்செல் ஸ்டார்க் மனைவி – ஆதம் கில்கிறிஸ்ட்டின் 15 வருடச் சாதனையை முறியடிப்பு

0
1236
Adam Gilchrist and Alyssa Healy

நியூசிலாந்தில் தற்பொழுது மகளிர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் தற்பொழுது விளையாடிக் கொண்டிருக்கின்றனர். போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஓபனிங் வீராங்கனை அலிஸா ஹீலி 138 பந்துகளில் 26 பவுண்டரி அடித்து 170 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரேச்சல் ஹைன்ஸ் 68 ரன்களும், பெத் மூனி 62 ரன்களும் குவித்துள்ளார்.

- Advertisement -
பிரமாண்ட சாதனை படைத்துள்ள அலிஸா ஹீலி

நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 509 ரன்களை ஹீலி குவித்திருக்கிறார். இந்த உலக கோப்பை தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 56.56. மகளிருக்கான உலக கோப்பை தொடர் வரலாற்றில், குறிப்பிட்ட ஒரு உலக கோப்பை தொடரில் எந்த ஒரு வீராங்கனையும் 500 ரன்கள் குவித்ததில்லை. இன்று அந்த சாதனையை ஹீலி தனது பெயருக்குப் பின்னால் எழுதியுள்ளார்.

அதேபோன்று உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் அதிக ஸ்கோர் அடித்த வீரராக ஆடம் கில்கிறிஸ்ட் 149 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். இன்று அவரை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு ஹீலி முன்னேறி இருக்கிறார்.

உலக கோப்பை வரலாற்றில் – இறுதி போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் :
  1. அலிஸா ஹீலி – 170* ரன்கள் ( இங்கிலாந்துக்கு எதிராக, 2022)
  2. ஆடம் கில்கிறிஸ்ட் – 149 ரன்கள் (இலங்கை அணிக்கு எதிராக,2007)
  3. ரிக்கி பாண்டிங் – 140* ரன்கள் (இந்தியாவுக்கு எதிராக, 2003 )
  4. சர் விவியன் ரிச்சர்ட்ஸ் – 138* ரன்கள் (இங்கிலாந்துக்கு எதிராக, 1979 )
  5. அரவிந்த டி சில்வா – 107* ரன்கள் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1996)