“ஏற்கனவே அழுதுட்டேன்.. வெஸ்ட் இண்டீஸ் மக்களுக்காக வலியை தாங்குவேன்” – புது சூப்பர் ஸ்டார் ஷாமர் ஜோசப் பேச்சு

0
212
Shamar

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு தற்போது 27 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஷாமர் ஜோசப் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருக்கிறார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த நாட்டில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்திருக்கிறது.

- Advertisement -

முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது போட்டியில் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருக்கிறது.

இந்தத் தொடரில் தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய ஷாமர் ஜோசப் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் அதிரடியாக முக்கியமான 36 ரன்கள் எடுத்தார். அடுத்து பந்துவீச்சில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் வீசிய முதல் பந்திலேயே ஸ்மித் விக்க்கெட்டை கைப்பற்றினார். மேலும் அந்தப் போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டையும் கைப்பற்றி அனைவரது கவனத்தையும் எடுத்தார்.

இந்த நிலையில் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் ஏழு விக்கெட்டுகளை பறித்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று இருக்கிறார். நேற்று பேட்டிங்கில் ஸ்டார்க் பந்துவீச்சில் கால் பாதத்தில் காயமடைந்து விளையாட முடியாமல் இருந்தார். ஆனால் இன்று மருத்துவ சிகிச்சையில் வலியோடு வந்து வெஸ்ட் இண்டிஸ் அணியை 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவில் வெல்ல வைத்திருக்கிறார்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய ஷாமர் ஜோசப் “எனது அணியினர் எனக்கு தரும் ஊக்கத்திற்காக நான் கத்த விரும்புகிறேன். எனது அணி மற்றும் கரீபியன் மக்களுக்காக நான் வலியை தொடர்ந்து அனுபவிக்கவும் செய்வேன். மருத்துவர் காலை இன்று என்னை அழைத்து கால் வலி எப்படி இருக்கிறது? என்று கேட்டார். நான் மிக வேதனையாக இருக்கிறது என்று சொன்னேன்.

இதையும் படிங்க : வீடியோ.. லாரா கூப்பர் கண்ணீர்.. ஆஸியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி.. உருக்கமான நிகழ்வுகள்

பிறகு அவர் என் பாதத்தில் ஏதோ செய்தார். அதற்குப் பிறகு எனக்கு ஓரளவுக்கு நன்றாக இருந்தது. நான் பந்துவீச்சில் அடிப்படையான விஷயங்களில் செயல்பட விரும்புகிறேன். ஆப் ஸ்டெம்பில் பந்து வீசுவதை விரும்புகிறேன். முதல் டெஸ்டிலும் இது எனக்கு நன்றாக வேலை செய்தது. நான் முதல் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்த பொழுதே அழுதுவிட்டேன். எனவே தற்பொழுது நான் அழ மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.