இந்த குறிப்பிட்ட வீரர்களை மட்டுமாவது பிக் பேஷ் போன்ற லீகில் பங்கேற்க அனுமதி கொடுங்கள் – பிசிசிஐயிடம் சுரேஷ் ரெய்னா அதிரடி

0
21650
Suresh Raina about Indian Players in BBL

சென்னை சூப்பர் கிங்ஸ் முதன்முதலாக 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. அந்த ஆண்டு சென்னை அணிக்காக 16 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 520 ரன்கள் சுரேஷ் ரெய்னா குவித்தார். அதேபோல 2011ம் ஆண்டு 16 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 438 ரன்கள் குவித்தார். அந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. 2018 மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே கைப்பற்றிய வருடமும் சுரேஷ் ரெய்னா 15 போட்டிகளில் நான்கு அரைச் சதங்களுடன் 445 ரன்கள் குவித்தார்.

அதேபோல 2008 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற பெயருக்கும் இவரே சொந்தக்காரர். அப்படி சிறப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு சென்னை அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 160 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு சென்னை அணி நிர்வாகம் இவரை கைப்பற்றவில்லை, அதுமட்டுமல்லாமல் நடந்து முடிந்த மெகா ஏலத்திலும் இவரை சென்னை அணி வாங்க முயற்சி கூட செய்யவில்லை. அதன் காரணமாக முதல் முறையாக சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு களம் இறங்கப் போவதில்லை. சர்வதேசப் போட்டியிலும் 2019-ம் ஆண்டு மகேந்திரசிங் தோனியுடன் இணைந்து இவர் ஓய்வு பெற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முன்பு ஒருமுறை கூடி இருந்த சுரேஷ் ரெய்னாவின் கருத்து தற்பொழுது வைரலாகி வருகிறது

பிசிசிஐ இந்திய அணி வீரர்களை ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாட அனுமதித்து வந்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் நடக்கும் மற்ற டி20 தொடர்களில் (பிபிஎல், கரீபியன் பிரீமியர் லீக் தொடர்கள் போன்ற தொடர்களில் ) இந்திய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ இதுநாள் வரையில் அனுமதித்தது கிடையாது. அதை சுட்டிக்காட்டும் வகையில் ரெய்னா ஒருமுறை இது சம்பந்தமான கருத்தை கூறியிருந்தார்.

பிசிசிஐ காண்ட்ராக்டில் இல்லாத வீரர்கள் அதுமட்டுமில்லாமல் ஓய்வு பெற்ற ஒரு சில வீரர்கள் கிரிக்கெட் போட்டியின்றி இருக்கின்றனர். டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் சர்வதேச போட்டியில் விளையாடும் அனுபவம் கிடைத்தது. எனவே தன் போன்ற வீரர் ( யூசப் பதான் ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் ) பிசிசிஐ விளையாட்டு சர்வதேச தொடர்களில் விளையாட அனுமதிக்க வேண்டும்.

பிசிசிஐ அவ்வாறு அனுமதி அளித்தால் எங்களைப்போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அங்கே விளையாடுவதன் மூலமாக எங்களுக்கு நிறைய அனுபவம் கிடைக்கும். எனவே பிசிசிஐ இது சம்பந்தமான முடிவை சற்று மறுபரிசீலனை செய்து எடுக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தாழ்மையான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் அன்று கூறிய அந்த கருத்து தற்போது மீண்டும் ரசிகர்கள் வாயிலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பிசிசி தற்போது இந்த முடிவை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைத்தால் சுரேஷ் ரெய்னா போன்ற முன்னணி வீரர்களுக்கு நல்ல முடிவாக அமையும். எனவே பிசிசிஐ இது சம்பந்தமாக வருங்காலத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.