சோகிப் அக்தரின் ஆல் டைம் ஓடிஐ அணியில் கிங் கோலிக்கு இடமில்லை – அட இவரா கேப்டன்

0
3672
Shoaib Akhtar XI

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோகிப் அக்தர். இவருக்கு “ரபல்பிண்டி எக்ஸ்பிரஸ்” மற்றொரு பெயரும் உண்டு . காரணம் இவரின் மின்னல் வேகப்பந்து வீச்சினை எதிர்கொள்ள பிரபலமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கூட கதிகலங்கி போயிருந்தார்கள் . 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் சோகிப் அக்தர் 161.3 கி.மீ வேகத்தில் பந்தை வீசி கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக பந்து வீசய பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையையும் தன்வசமாக்கினார்.

இவரின் பந்துகளை அடிப்பதை விட அடிக்காமல் விடுவதே மேல் என நினைக்கும் அளவிற்க்கு பேட்ஸ்மேன்களை தனது மின்னல் வேகப்பந்து வீச்சினால் மிரட்டினார். அவர் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்களும் , 163 ஒருநாள் போட்டிகள் விளையாடி 247 விக்கெட்டுகளும் மற்றும் 15 டி-20 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் .

- Advertisement -

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட்டில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார் . அவருடைய யூடியூப் சேனலில் தினசரி நடக்கும் கிரிக்கெட் செய்திகளுக்கு அவருடைய கருத்துகளை தெரிவித்து வருகிறார் .

Shoaib Akhtar and Sachin Tendulkar ODI

இதற்கிடையில் சோகிப் அக்தர் தனது ஆல் டைம் ஒருநாள் லெவனை வெளியிட்டார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்றைய காலத்தின் முக்கிய பேட்ஸ்மேன் விராட் கோலி அக்தரின் ஆல் டைம் லெவனில் இடம் பெறவில்லை. மேலும் கேப்டனாக எம்.எஸ்.தோனிக்கு பதிலாக ஷேன் வார்னை நியமித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சையையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

இன்னிங்க்ஸை திறக்க கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் மற்றொரு வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கோர்டன் கிரீனிட்ஜ் இருவரும் தொடக்க வீரர்களாகவும் , பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான இன்சாம்-உல்-ஹக் 3 வது வீரராகவும் அவரை தொடர்ந்து சயீத் அன்வர் தடுப்பாட்டகாரராகவும் களமிறங்குவார்கள் . அவருக்கு பின்னால் எம்.எஸ். தோனி , ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் அடுத்ததாக வருகிறார்கள். மேலும் அணியின் விக்கெட் கீப்பராக எம்.எஸ்.தோனியை நியமித்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் உலககோப்பை நாயகர்களான கபில் தேவ் மற்றும் யுவராஜ் சிங் ஆல்ரவுண்டர்களாகவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களான வசீம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோரை அக்தர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்துள்ளார் . இறுதியாக ஆஸ்திரேலிய அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளரை சுழற்பந்து வீச்சாளாரகவும் அணியின் கேப்டனாகவும் அணிக்குள் கொண்டு வருகிறார் சோகிப் அக்தர் . இந்த அணியில் பல கிரிக்கெட் சாதனைகளை படைத்து கிரிக்கெடில் முக்கிய வீரராக இருக்கும் விராட் கோலிற்க்கு இடமில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சோகிப் அக்தரின் ஆல் டைம் ஒருநாள் லெவன் :

கோர்டன் கிரீனிட்ஜ், சச்சின் டெண்டுல்கர், இன்சமாம்-உல்-ஹக், சயீத் அன்வர், எம்.எஸ். தோனி (கீப்பர்), ஆடம் கில்கிறிஸ்ட், யுவராஜ் சிங், வாசிம் அக்ரம், வகார் யூனிஸ், கபில் தேவ் மற்றும் ஷேன் வார்ன் (கேப்டன்).