டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய 11 இந்திய வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அணி

0
134
Dhoni Gambhir and Kohli Yuvraj

டி20 கிரிக்கெட்டின் பெரிய திருவிழா என்றால் அது டி20 உலக கோப்பை தான். உலகத்தில் உள்ள அத்தனை சிறந்த அணிகளும் ஓரிடத்தில் கூடி யார் சிறந்த டி20 அணி என்பதை நிர்ணயிக்கும் தொடர் இது. இந்தத் தொடர் கடந்த 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு இறுதிப்போட்டி அரையிறுதிப் போட்டி என்று ஆடினாலும் இந்திய அணியால் கோப்பையை கைப்பற்ற இயலவில்லை. இருந்தாலும் இந்த தொடர்களில் வலுவான அணிகளில் ஒன்றாக இந்தியா இருந்து வந்துள்ளது. அப்படி இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய 11 பேர்களை கொண்டு உருவாக்கப்பட்ட சிறந்த இந்திய அணியை காணலாம்.

துவக்க வீரர்கள் – ரோகித் மற்றும் காம்பீர்

இந்த அணியின் துவக்க வீரர் ரோகித் மற்றும் காம்பீர் செயல்படுவர். இந்திய அணியின் சிறந்த துவக்க வீரரான ரோகித் தான் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர். இந்த தொடர்களில் மொத்தம் 673 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல 2007ஆம் ஆண்டு நடந்த தொடரை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்த காம்பீர் 20 ஆட்டங்களில் 524 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

மிடில் ஆர்டர் – கோலி, ரெய்னா மற்றும் தோனி

டி20 உலகக் கோப்பை தொடரின் முகமாக பார்க்கப்படுபவர் விராட் கோலி. இதுவரை 16 ஆட்டங்களில் 777 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல 21 போட்டிகளில் 453 எங்களை கொடுத்துள்ள சுரேஷ் ரெய்னா தான் இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் சதம் அடித்த ஒரே வீரர். இதுவரை நடந்த அத்தனை தொடர்களிலும் கேப்டன் மற்றும் கீப்பராக பங்காற்றிய தோனி தான் இந்த அணிக்கும் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்.

ஆல் ரவுண்டர்கள் – யுவராஜ், ஜடேஜா மற்றும் இர்பான் பதான்

இந்த அணியின் முதல் பிரதான ஆல்-ரவுண்டராக யுவராஜ் செயல்படுவார். இவர் 593 ரன்களும் 12 விக்கெட்டுகளையும் இந்த தொடரில் எடுத்து அசத்தி உள்ளார். அதேபோல மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இர்பான் பதான் 85 ரன்களும் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஜடேஜாவும் 56 ரன்களை எடுத்ததோடு 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பந்து வீச்சாளர்கள் – அஸ்வின், நெஹ்ரா மற்றும் ஆர்.பி.சிங்

இந்த அணியில் சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் ஆடுவார். டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் இவர்தான். இவருடன் வேகப்பந்து வீச்சாளர்களாக முறையை 15 மற்றும் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் ஆர்.பி.சிங் செயல்படுவர்.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை ஆடிய சிறந்த இந்திய அணி – ரோகித், காம்பீர், கோலி, ரெய்னா, தோனி, யுவராஜ், ஜடேஜா, இர்பான் பதான், அஷ்வின், நெஹ்ரா, ஆர்.பி.சிங்.