“இந்த இந்திய வீரர் தான் கேப்டன்ஷியில் என்னுடைய குரு”! – ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

0
1453

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான டி20 தொடர் நேற்று முடிவடைந்தது. இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி தொடரானது 3ம் தேதி மும்பையில் தொடங்கியது . முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடர் சமநிலையில் இருக்கும்போது மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று ராஜ்காட்டில் நடைபெற்றது . முதலில் டேட்டிங் செய்த இந்திய அணி சூரியகுமார் யாதவின் அபார் ஆட்டத்தால் 228 ரகளை குவித்தது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சினால் 135 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஷதிப் மூன்று விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் ஹர்திக் பாண்டியா மற்றும் சஹால் இரண்டு விக்கெட்லையும் அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாகவும் அக்சர் பட்டேல் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்தியா அணி வெற்றி பெறும் மூன்றாவது தொடர் இதுவாகும்.இதற்கு முன் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 1-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று இருக்கிறது இந்திய அணி.இதுவரை எட்டு டி20 போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்தியுள்ள ஹர்திக் பாண்டியா அவற்றில் 6 வெற்றிகளை பெற்றுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் இவர் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது .

கார்த்திக் பாண்டியாவின் கேப்டன்சி பற்றி கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர் . இந்நிலையில் தன்னுடைய கேப்டன் பொறுப்பு பற்றி பேசியுள்ள ஹர்திக் பாண்டியா நான் இதுவரை என்னுடைய ஜூனியர் கிரிக்கெட்டில் கூட கேப்டன் பொறுப்பு ஏற்றதில்லை.ஒரே ஒருமுறை பரோடாவின் அண்டர் 16 அணியை வழி நடத்தி இருக்கிறேன்.அதன் பிறகு என்னுடைய பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கவனம் செலுத்த பயிற்சியாளர்கள் அறிவுறுத்தி இருந்தனர் என்று கூறியிருந்தார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர் நான் ஒரு சிறந்த கேப்டனாக உருவாகிக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஆசிஷ் நெஹ்ரா என்று கூறி இருக்கிறார். இது பற்றி தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா என்னுடைய கேப்டன்சிகளுக்கான பாராட்டுக்கள் ஆசிஷ் நெஹ்ரா தான் போய் சேர வேண்டும் . என்னுடைய கேப்டன்ஷியின் நிறைய பண்புகளை அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் . கிரிக்கெட்டில் நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக சிந்திப்பவர்களாக இருக்கிறோம் . என்னால் ஒரு ஆட்டத்தைப் பற்றி சரியாக யூகிக்க முடியும் . ஆனால் என்னுடைய வியூகம் சரிதானா என்பதை ஆசிஷ் நெஹ்ரா எனக்கு தெளிவுபடுத்தினார் நாங்கள் இருவரும் கிரிக்கெட் என்று வந்துவிட்டால் ஒரே மனநிலையை கொண்டுள்ளவர்கள் என்று கூறினார் .

- Advertisement -

மேலும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களை பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா” இளம் அணியை வழிநடத்துவது அவ்வளவு கடினமான காரியம் அல்ல ஆனால் சில நேரங்களில் அவர்கள் தவறு செய்வார்கள் . தவறிலிருந்து தான் கற்றுக் கொள்ள முடியும் மற்றும் அனுபவங்களை பெற முடியும். அதனால் அவர்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள அவகாசம் கொடுக்க வேண்டும் மேலும் அதை ஏற்றுக்கொள்ள நமக்கு பொறுமையும் வேண்டும் . நம் தவறுகளை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவை நம்மை வெகு தூரம் இழுத்துச் சென்று விடும் என்று கூறினார் .

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் முடிந்ததை அடுத்து முதலாவது ஒரு நாள் போட்டி வருகின்ற 10ஆம் தேதி கௌகாத்தியில் தொடங்க உள்ளது. இந்த ஒரு நாள் அடியிலும் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றிருக்கிறார் . கடைசியாக அவர் ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .