டெஸ்ட் கிரிக்கெட் ஜாம்பவான் அலெஸ்டர் குக்கை கிளீன் பவுல்ட் ஆக்கிய 15 வயது சிறுவன் – வீடியோ இணைப்பு

0
205

இங்கிலாந்தில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அலெஸ்டர் குக் அனைவராலும் கவரப்பட்ட ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார். 2006 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். 16வது இங்கிலீஷ் கிரிக்கெட் வீரராக தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பெருமையும் அவருக்கு உண்டு. அதன் பின்னர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடினார்.

2006 முதல் 2018ஆம் ஆன்டு வரையில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை மொத்தமாக 12472 ரன்கள் குவித்திருக்கிறார். அதில் 57 அரை சதங்கள் 33 சதங்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் அவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

15 வயது இளம் கிரிக்கெட் வீரரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்த அலஸ்டேர் குக்

ஹெரிடேஜ் கோப்பை தொடரின்(வில்லேஜ் கிரிக்கெட் தொடர்) காலிறுதிப் போட்டியில் பெட்ஃபோர்ட்ஷையர் இளம் விவசாயிகள் சிசி மற்றும் பொட்டன் டவுன் சிசி அணிகள் விளையாடின. பெட்ஃபோர்ட்ஷையர் அணிக்கு அலஸ்டேர் குக் விளையாடி வருகிறார்.

12 ஓவர்களில் 155 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலையில் அலஸ்டேர் குக் 5 ஆவது வீரராக களமிறங்கினார். அங்கு வந்த வேகத்தில் அதிரடியாக 20 ரன்கள் குவித்த பின்னர், பொட்டன் டவுன் சிசி அணியைச் சேர்ந்த 15 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் கிரன் ஷேக்லெட்டன் வீசிய பந்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் மிகப் பெரிய ஜாம்பவான் வீரரான இவர் வளர்ந்து வரும் இளம் வேகப்பந்து வீச்சாளரிடம் கிளீன் பவுல்டு ஆனது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட செய்துள்ளது. அவர் அவுட்டான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. போட்டியின் முடிவில் பொட்டன் டவுன் சிசி அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.