25 வருடங்கள் முன்பு நடந்ததற்கு ராகுல் டிராவிடம் மன்னிப்பு கேட்ட ஆலன் டொனால்ட் – ராகுல் டிராவிட் பெருந்தன்மையான பதில்!

0
953
Dravid

பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வருகிறது இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 44 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தேநீர் இடைவேளையின் போது 37 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது .

முன்னதாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்து இந்திய அணியின் ஆட்ட அணுகுமுறைகள் மற்றும் திட்டங்களை பற்றி பேசியிருந்தார். அதில் அவர் பங்களாதேஷ் அணி உள்ளூர் போட்டிகளில் ஆடும்போது மிகவும் பலம் வாய்ந்த அணி என்று கூறியிருந்தார் . மேலும் அவர்களது பந்து வீச்சு தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது . பேட்டிங்கை மட்டும் சார்ந்து இருக்காமல் தற்போது பந்துவீச்சுத் துறையிலும் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியிருந்தார் .

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு தென் ஆப்பிரிக்கா அணியின் உன்னால் வேகப்பந்துவீச்சாளரான ஆலன் டொனால்ட் பந்து வீச்சு பயிற்சியாளராக வந்ததிலிருந்தே அவர்களது பவுலிங் யூனிட் சிறப்பாக செயல்பட்டு வருகிறது சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரிலும் சிறப்பாக பந்து வீசினர் . அவர்களது ஒரு நாள் போட்டி தொடரின் வெற்றிக்கு பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது .

லைட்னிங் ஒயிட் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்ட ஆலன் டொனால்ட் அவர் விளையாடும் காலங்களில் அதிவேகமான பந்துவீச்சாளராக மட்டுமல்லாமல் ஆக்ரோஷமான வீரராகவும் விளங்கியவர் . எதிரணி வீரர்களுடன் அடிக்கடி வாக்குவாதங்களிலும் ஈடுபட்டு வருவார் . இதேபோன்று கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் போது ராகுல் டிராவிட் உடன் கருத்து முதலில் ஈடுபட்டார் இதற்காக பலமுறை வருத்தம் தெரிவித்து வந்த ஆலன் டொனால்ட் தற்போது பங்களாதேஷில் இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் பொது மன்னிப்பு கேட்டுள்ளார் மேலும் ராகுல் டிராவிட் உடன் டின்னர் செல்வதற்கு விருப்பமும் தெரிவித்துள்ளார் .

இது குறித்து பேசி உள்ள “ஆலன் டோனல்ட் 25 ஆண்டுகளுக்கு முன்னர் டர்பனில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் போட்டி தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் விளையாடிய போது நான் ராகுல் டிராவிட்டிடம் மிக கடுமையாக நடந்து கொண்டேன் அது எனது மனதை இன்னும் முறுக்கி கொண்டே இருக்கிறது . அந்தப் போட்டி முடிந்த பின்னரே அவரிடம் மன்னிப்பு கேட்க நினைத்தேன் ஆனால் இந்திய நிர்வாகம் அந்த நேரத்தில் மறுத்து விட்டது” என்று கூறினார் ,

- Advertisement -

மேலும் இது பற்றி பேசிய அவர் அது நான் நடந்து கொண்டது மிகவும் கீழ்த்தரமான ஒரு செயல் அதற்காக இப்போது ராகுல் டிராவிட்டிடம் பொதுவெளியில் மன்னிப்பு கோருகிறேன் . அவர் என்னுடைய மன்னிப்பை ஏற்று என்னுடன் உணவு அருந்த வந்தால் அதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுவேன்” என்று கூறியிருக்கிறார் .

இதுகுறித்து ராகுல் டிராவிட்டிடம் கேட்டபோது ” நான் உண்மையாகவே அவரை மன்னித்து விட்டேன் ஆலந்தினால் என்னுடைய ஒரு சிறந்த நண்பராக கருதுகிறேன் . அவர் பணம் செலுத்துவதாக இருந்தால் அவருடன் உணவு அருந்தி செல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று நகைச்சுவையுடன் கூறினார்