டி20 வரலாற்றில் 4 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசி புதிய சாதனை படைத்துள்ள இந்திய வீரர்

0
497
Akshay Karnewar

சையது முஷ்டாக் அலி டிராபி தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது . நவம்பர் 4ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக முப்பத்தி எட்டு மாநில அணிகள் பங்கேற்று சிறப்பாக விளையாடி கொண்டு வருகின்றனர்.
இன்று விதர்பா மற்றும் மணிப்பூர் அணிகள் மோதிய போட்டியில் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் அசத்திய அக்ஷய் கர்நேவர்

முதலில் டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு மொத்தமாக 222 ரன்கள் குவித்து மணிப்பூர் அணியை நெருக்கடியான நிலைக்கு விதர்பா அணி தள்ளியது. 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை மேற்கொண்டு விளையாடத் தொடங்கிய மணிப்பூர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

குறிப்பாக விதர்பா அணியின் ஆல்ரவுண்டர் வீரரான அக்ஷய் கர்நேவர் வீசிய 4 ஓவர்களில் ஒரு ரன் கூட மணிப்பூர் அணி பேட்ஸ்மேன்களால் குவிக்க முடியவில்லை. நான்கு ஓவர்களும் மெய்டன் ஒவர்களாக அவர் வீசியதோடு மட்டுமல்லாமல் இரண்டு விக்கட்டுகளையும் கைப்பற்றினார். போட்டியின் முடிவில் பணி பூரணி 55 ரன்களில் 10 விக்கெட் இழந்து, விதர்பா அணியிடம் 167 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆண்களுக்கான டி20 வரலாற்றில் நான்கு ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசி சாதனை படைத்துள்ள அக்ஷய் கர்நேவர்

மணிப்பூர் அணைக்கு எதிராக தான் வீசிய 4 ஓவர்களில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அக்ஷய் கர்நேவர் புதிய சாதனையை இன்று நிகழ்த்தி காட்டியுள்ளார். ஆண்களுக்கான டி20 போட்டிகளில் இதுவரை எந்த ஒரு பந்து வீச்சாளரும் நான்கு ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசியதில்லை.

ஆனால் இன்று அதை திருத்தி அமைக்கும் விதமாக அக்ஷய் கர்நேவர் 4 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசி புதிய சாதனை படைத்திருக்கிறார். இருபத்தி ஒன்பது வயதான அக்ஷய் கர்நேவர் படைத்த இந்த சாதனை குறித்து இந்திய ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் அவரை வெகுவாக பாராட்டு வருகின்றனர்.