சச்சின் ரெக்கார்டை உடைச்சிருவியா? அங்க தான் உனக்கு சிக்கல் இருக்கு – விராட்கோலிக்கு சவால் விட்ட அக்தர்!

0
580

சச்சின் சாதனை முறியடிக்க இனிமேதான் விராட் கோலிக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று சுவை பக்தர் கருத்து தெரிவித்திருக்கிற.

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது பேட்டிங்கில் நிகழ்த்தாத சாதனையே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவிற்கு தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவற்றில் ஒன்றாக எவராலும் முறியடிக்க முடியாது என பார்க்கப்படும் 100 செஞ்சுரிகள் சாதனை இருக்கிறது.

- Advertisement -

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை விராட் கோலி 70 சதங்களை எட்டிய போது, நிச்சயம் சச்சினின் சாதனையை இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களில் முறியடித்து விடுவார் என்று பலராலும் பார்க்கப்பட்டது. துரதிஷ்டவசமாக கொரோனா மற்றும் அதைத் தொடர்ந்து வந்த டி20 உலக கோப்பை தொடரில் தோல்வி என ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையும் விராட் கோலிக்கு தலைகீழாக மாறியது. மன அழுத்தத்தின் காரணமாக மூன்று வித போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன் பொறுப்பை அவர் ராஜினாமா செய்தார்.

கடைசியாக, 2019 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்த அவர் கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு பிறகு ஆசிய கோப்பை தொடரின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார். 33 வயதாகும் விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என்பதால் சச்சின் சாதனை முறியடிக்க இன்னும் 30 சதங்கள் அவர் அடிக்க வேண்டி இருக்கிறது. விராட் கோலியால் இந்த சாதனையை முறியடிப்பது கடினம் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் விராட் கோலிக்கு இனிமே தான் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கிறது என்று பேசியிருக்கிறார் சோயிப் அக்தர்.

- Advertisement -

“உள்ளதை உள்ளபடி உண்மையாக கூறக்கூடிய வெகு சில கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி ஒருவர். கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது சோதனை காலம் முடிவுற்று மீண்டும் சிறப்பான ஆட்டத்தை அவர் தொடர வேண்டும். இன்னும் 30 சதங்கள் அவர் அடிக்க வேண்டியது இருக்கிறது. இனிமேல் தான் அவருக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கிறது. எக்காரணம் கொண்டும் தனது மன உறுதியை விராட் கோலி விட்டுவிடக்கூடாது. சவாலாக எடுத்துக் கொண்டு முறியடிக்க பாடுபட வேண்டும். இது அவருக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாது இந்திய அணிக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும்.” என்றார்.

“நான் முன்பு சொன்னதை தான் இப்போதும் கூறுகிறேன். கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி தான் தலைசிறந்த பேட்ஸ்மேன். 30 சதங்கள் அடிப்பதற்கு இன்னும் அவருக்கு போதிய காலம் இல்லை. 71 வது சதம் அடிப்பதற்கு அவர் 900 நாட்களுக்கும் மேல் எடுத்துக் கொண்டார். அவரது பாதையை அவரே கடினமாக்கிக் கொண்டார். ஆனாலும் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. விராட் கோலியின் கடினமான காலம் முடிந்துவிட்டது. விரைவில் தனது பழைய பார்மிற்கு திரும்புவார் என்று நம்புகிறேன். சச்சின் சாதனையை முறியடிப்பதை பார்ப்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.” என்றார்.

ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவிருக்கிறது. அதில் விராட் கோலியும் பங்கே உள்ளார்.