பறவையாய் மாறி கேட்ச் பிடித்த அகில் ஹுசைன் – ஆச்சர்யத்தில் நிக்கோலஸ் பூரான் மற்றும் ரசிகர்கள்

0
769
Akeal Hosein Catch in CPL

மேற்கு இந்தியத் தீவுகளில் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் என்னும் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடர் பாணியில் 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் விருவிருப்பாக தற்போது போய்க் கொண்டிருக்கிறது. கெயில், பொல்லார்ட், பிராவோ போன்ற முன்னணி வீரர்கள் இருப்பதால் இந்த இந்த தொடர் அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது.

நேற்றைய ஆட்டத்தில் ட்ரிபாகோ மற்றும் கயானா அணிகள் மோதின. கடந்த தொடரில் கோப்பை வென்ற அணி ட்ரிபாகோ அணி. அந்த அணியை எதிர்த்து கயானா அணி விளையாடியதால் ஆட்டம் தொடங்கும் முன்பே விறுவிறுப்பும் தொடங்கிவிட்டது. ட்ரிபாகோ அணி 20 ஓவர்கள் முடிவில் 138 ரன்களை குவித்தது. எளிதான இலக்கை துரத்தினாலும் மடமட என விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது.

- Advertisement -

கயானா அணி சார்பாக களமிறங்க விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் அருமையாக ஆடி வந்தார். 14 பந்துகளில் 27 ரன்கள் குவித்து கயானா அணியின் நம்பிக்கையாக இருந்தார் பூரன். இரண்டு பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என ஆட்டத்தை உயிர்ப்புடன் வைக்கும் படியாக அமைந்தது இவரது ஆட்டம். ஆனால் அந்த நேரத்தில் சரியாக பந்துவீச வந்த ரவி ராம்பால் 18-வது ஓவரில் இரண்டாவது பந்தை பூரனை நோக்கி வீசினார்.

பந்து வைடாக வீசப்பட்டாலும் நிக்கோலஸ் பூரன் அதை அடிக்க பந்து சிக்சர் போகும் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் அக்கீல் ஹொசைன் என்னும் வீரர் அற்புதமாக பந்தை தனது இடக் கையால் பறந்து பிடித்தார். எல்லைக் கோட்டிற்கு மிக அருகில் சென்றும் எல்லைக்கோட்டை தொடாமல் பார்த்துக் கொண்டார். மிகவும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பூரன் இதனால் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

நிக்கோலஸ் பூரன் என்னதான் வெளியேறினாலும் ட்ரிபாகோ அணியால் இந்த ஆட்டத்தை வெல்ல முடியவில்லை. கடைசி நேரத்தில் ஆட்டம் சமமாக முடிந்து சூப்பர் ஓவரில் கயானா அணி வெற்றி பெற்றது. குறைந்த இலக்கு கொண்ட ஆட்டத்தில் பிடிக்கப்பட்ட இந்த கேட்ச் தான் ஆட்டத்தை கடைசி வரை விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அக்கீல் ஹொசைன் பிடித்த இந்த கேட்ச் வைரலாகி தற்போது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

- Advertisement -