இந்திய கிரிக்கெட்

கம்பீர் கல்யாணத்தை வச்சுட்டீங்க ஆனா கோட் எங்க.. பும்ரா ஷிவம் துபேவும் சமமா? – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

இந்த மாதம் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியில் இடம் பெறாவிட்டால் அதற்கு சரியான மாற்றுவீரரை உடனே கண்டறிய வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய சாம்பியன்ஸ் டிராபி அணியில் பும்ரா இடம்பெற்று இருந்தாலும் கூட, அவர் இன்னும் 100 சதவீத உடல் தகுதியை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்காக கடைசி நேரம் வரை காத்திருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு சரியான மாற்று வேகப் பந்துவீச்சாளர் அணியில் இல்லை என்று கூறலாம்.

கல்யாணத்துக்கு கோட் இல்லாமல் எப்படி?

இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும்பொழுது “இந்திய அணியில் பும்ரா இல்லை என்றால் இந்திய அணியின் ஒட்டு மொத்த திட்டங்களையும் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். மறுபடியும் முதலில் இருந்து சில விஷயங்களை யோசிக்க வேண்டும். பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா போதும் என பிடிவாதமாக இருந்தால் இந்திய அணி உண்மையில் தயாராகத்தான் இருக்கிறதா?”

“உண்மையில் இந்திய அணி தயாராக இல்லை என்பதுதான் நிஜம். இதை பார்க்கும் பொழுது நீங்கள் ஒரு திருமணத்திற்கு செல்லும் பொழுது அதற்கு அணிந்து கொள்ள வேண்டிய கோட் இன்னும் வரவில்லை என்பது போல இருக்கிறது. பும்ரா இல்லையென்றால் நிறைய கதவுகள் திறக்கும் என்று நினைக்கிறேன். இதில் ஒன்றாக ஹர்ஷித் ராணா தானாகவே இந்திய அணிக்குள் வருவார்”

- Advertisement -

பும்ரா ஷிவம் துபே இருவரும் சமமானவர்களா?

“இப்படி அவர் தானாகவே வந்தாலும் கூட அவர் பும்ராவுக்கு சமமாக முடியாது. இது இந்திய அணியில் இருக்கும் தற்போதைய சிக்கலை தீர்க்க உதவாது. நாம் ஹர்ஷித் ராணாவை டி20 தொடரில் ஷிவம் துபேவுக்கு மாற்று வீரராக இறக்கினோம். இப்படி இருக்கும் பொழுது ஷிவம் துபேவுக்கு பும்ரா மாற்றாக இருக்க முடியுமா? என்று யோசிக்க வேண்டும்”

இதையும் படிங்க : என்னுடைய இலங்கை அணி.. வெறும் மூன்று நாளில் இந்த இந்திய அணியை வீழ்த்தும் – அர்ஜுன ரணதுங்கா பேட்டி

“தற்போது இந்திய அணி நிர்வாகம் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும். அவர்கள் முகமது சிராஜை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் உடன் அவர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்ல வேண்டும். அவர்கள் இந்த விஷயத்தில் ஏற்கனவே தங்கள் செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts