நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் வீரர் சோப்ரா ஆர்ச்சரின் சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணி தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா போட்டியின் போது தூங்கிக் கொண்டிருந்த ஆர்ச்சர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 67 ரன்கள் குவித்தார். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது ராஜஸ்தான் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் பக்கம் கேமரா திரும்பியது. அப்போது வீரர்கள் அனைவரும் போட்டியை பார்த்துக் கொண்டிருக்க சோப்ரா ஆர்ச்சர் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார்.
இது அப்போது கலகலப்பை உண்டாக்கிய நிலையில், வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் விளையாட தன் முதல் பந்தில் பிரின்ஸ் ஆரியாவின் விக்கட்டை வீழ்த்திய ஆர்ச்சர், அதற்குப் பிறகு அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டையும் வீழ்த்தி பெரிய திருப்புமனயை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் ராஜஸ்தான் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஆர்ச்சர் அந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ஆகாஷ் சோப்ரா இவர் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் தாக்கப்படுவதை ஆர்ச்சர் விரும்பவில்லை என்று நினைக்கிறேன். பின்னர் திடீரென்று யாரோ அவரை எழுப்பி இருக்கிறார்கள். இதை நான் சொன்னால் எல்லாரும் கோபப்படலாம், ஆனால் ஆறு மாதங்கள் தூங்கிய பிறகு எழுந்திருக்கும் அந்த நபரை நான் நினைவு கூர்ந்து இருக்கிறேன்.
இதையும் படிங்க:எனக்கு இந்த பழைய நட்சத்திர வீரர்கள் வேணும்.. அவங்க சேர்ந்து மறுபடியும் ஆடனும் – தோனி விருப்பம்
ஆர்ச்சர் விழித்தெழுந்து தனது முதல் பந்திலேயே பிரின்ஸ் ஆர்யாவின் ஸ்டம்ப்களை அடித்தார். அதற்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் அவரது பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகள் அடித்தாலும் இறுதியில் அவரிடமே ஆட்டம் இழந்து வெளியேறினார். முதல் ஓவரில் இருந்தே ஆர்ச்சர் தனது வேலையை அற்புதமாக செய்துவிட்டார். எனவே அப்போதிருந்து கதை முற்றிலும் மாறிவிட்டது” என்று ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார். முதல் இரண்டு போட்டிகளில் மோசமாக விளையாடிய ஆர்ச்சர் கடந்த இரண்டு போட்டிகளாக தனது சிறந்த பதிவுகளை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.