கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“ரகானே ரன் அடிச்சாரு ; ஆனா அவர் டெக்னிக்ல எனக்கு திருப்தி கிடையாது” – விமர்சனத்தை அள்ளி வீசும் ஆகாஷ் சோப்ரா!

நடப்பு இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம்பட்டிருக்க ரகானே அணியில் இடம் பெற்றார்!

- Advertisement -

512 நாட்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணிக்குள் திரும்பிய அவர் நேற்று மிகச் சிறப்பாக விளையாடி முக்கியமான நேரத்தில் 89 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அணிக்குள் மீண்டும் வந்த அவர் தனது பேட்டிங் டெக்னிக்கில் சில மாற்றங்களை செய்து விளையாடுகிறார். அவருடைய நம்பிக்கையும் மிகச் சிறப்பான முறையில் இருக்கிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் அதிரடியாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டத்தை வெல்வதற்கு முக்கியக் காரணமாகவும் விளங்கினார்.

- Advertisement -

அவர் தற்போது சிறப்பாக விளையாடினாலும் அவரது பேட்டிங் டெக்னிக் தனக்கு முழுத்திருப்தியாக இல்லை என்று கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வீரரும் ஆன ஆகாஷ் சோப்ரா அதிரடியாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது
“ரகானே தனது பேட்டிங் டெக்னிக்கில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்திருக்கிறார். அவர் தனது இரண்டு கால்களையும் கிரீசுக்குள் வைத்து நின்று விளையாடுகிறார். மேலும் அவர் பந்தை வரவிட்டு தாமதமாக விளையாடுகிறார். ஆனால் அவர் முன்னோக்கி இதில் போகவில்லை. விளையாடுவதற்கு இது சரியான வழிமுறை என்று எனக்கு 100% தோன்றவில்லை.

இது விளையாடுவதற்கு ஒரு வழி என்றால் இன்னொரு வழியாக விராட் கோலி விளையாடுவது இருக்கிறது. விராட் கோலி முன்காலில் விளையாடுகிறார். அதனால் அவர் தனது விக்கெட்டையும் இழந்தார்.

ஆனால் அந்தப் பந்தை சிறப்பாக அவரால் சந்தித்திருக்க முடியுமா? லபுசேனும் இப்படித்தான் விளையாடுகிறார். அதனால்தான் அவர் நிறைய அடி வாங்குகிறார். இவர்கள் பேக் புட்டில் விளையாடினால் பந்தைச் சிறப்பாக சந்திக்கலாம்!” என்று கூறியிருக்கிறார்!

Published by