ஆடுகளத்தில் வந்து படுத்து தூங்குங்க.. இந்திய வீரர்களுக்கு அறிவுரை

0
2030

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான   நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ஆஸ்திரேலிய அணி முதலில் 480 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் உஸ்மான் கவஜா 422 பந்துகளை எதிர் கொண்டு 180 ரன்கள் சேர்த்தார்.

- Advertisement -

கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்கு மேலாக உஸ்மான் கவஜா பேட்டிங் செய்தார். மறுபுறம் கேமரான் கிரீன் 170 பந்துகளை எதிர் கொண்டு 114 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 36 ரன்கள் எடுத்துள்ளது.  இந்த  நிலையில் இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தற்போது இந்தியா எந்த விக்கெட்டையும் இழக்கவில்லை.

இப்போது உள்ள நிலை இந்தியாவுக்கு மகிழ்ச்சியே கொடுக்கும். இன்று இந்திய வீரர்கள் ஆடுகளத்திற்கு வந்து படுத்து தூங்கி விட வேண்டும். ஆஸ்திரேலிய வீரர் கவாஜா எப்படி மெதுவாக விளையாடி வெறுப்பேத்தினாரோ அதேபோன்ற யுத்தியை இந்திய வீரர்களும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த ஆடுகளத்தில் விக்கெட்டுகள் எடுக்கும் பந்து அதிகமாக வராது.

அதனால் நீங்கள் தைரியமாக விளையாடலாம். நீங்கள் கவனக்குறைவாக விளையாடினால் மட்டுமே ஆட்டம் இழப்பீர்கள். ஆஸ்திரேலியா வீரர்கள் எப்படி ஆட்டம் இழந்தார்கள் என்பதை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அஸ்வின் இறுதியில் கொஞ்சம் வித்தியாசமாக பந்து வீசி நெருக்கடி ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதை தவிர அவர்களுக்கு பேட்டிங் மிகவும் சுலபமாகவே இருந்தது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களுக்கு லயான் மட்டும்  சவால்களை கொடுப்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் பந்தை நன்றாக சுழற்றுவார். மற்ற ஸ்பின்னர்களுடன் அவருக்கு கொஞ்சம் பவுன்ஸ் கிடைக்கும். எனினும் ஆடுகளத்தில் எந்த அபாயமும் இல்லை.

இதனால் இந்திய வீரர்கள் ரன்கள் சேர்க்கணும். பந்து நன்றாகவும் பேட்க்கு வரவில்லை. இதனால் இந்திய வீரர்கள் எந்த தொந்தரவும் இன்றி விளையாடலாம். நீங்கள் தவறு செய்யாத வரை விக்கெட்டுகள் ஆஸ்திரேலியாவுக்கு கிடைக்காது என்று அகார்கர் கூறியுள்ளார். இந்திய அணி கிட்டத்தட்ட 600 ரன்களுக்கு மேல் அடித்து ஆஸ்திரேலியாவை மீண்டும் பேட்டிங் செய்ய வைத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.