நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடியவர் இவர் தான் – அஜித் அகார்கர் கருத்து

0
150

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாசை இழந்த இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில் ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய வீரர் யார் என்பது குறித்து  அஜித் அகார்கர் பேட்டி அளித்துள்ளார்.

- Advertisement -

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 306 ரன்கள் அடித்தது. இதில் சுப்மான் கில் 65 பந்துகள் எதிர்கொண்டு அரை சதம் அடித்தார். இதனை தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் 12.5 ஓவர்களை வீசப்பட்டது. இதில் சுப்மான் கில் 42 பந்துகளை எதிர் கொண்டு 45 ரன்கள் சேர்த்துள்ளார். இதுகுறித்து பேசிய அஜித் அகார்கர் ,  நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மான் கில் மட்டும்தான் சிறப்பாக விளையாடியதாக பாராட்டினார்.

சுப்மான் கில் ஆட்டத்தை மறைக்கும் அளவிற்கு வேறு யாரும் செயல்படவில்லை. இதுவே அவர் எந்த அளவுக்கு நியூசிலாந்து தொடரில் விளையாடி இருக்கிறார் என்பதை காட்டுகிறது. இந்த இரண்டு ஒருநாள் போட்டியை வைத்து பார்த்தால் இந்திய அணியிலேயே சுப்மான் கில் மட்டும்தான் என்னை மிகவும் கவர்ந்தார்.

தற்போது பேட்டிங்கில் அவருடைய குறை என்ன? நிறை என்ன ?என்பதை அறிந்து அவர் விளையாடுகிறார். பேட்டிங் தொடக்கத்தில் ரன் சேர்க்க கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு, பிறகு அதிரடியாக ஆடி எதிரணிக்கு நெருக்கடி தருகிறார்.இளம் வீரர்கள் பலர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பில் அதிரடியாக விளையாடுகிறேன் என நினைத்து ஆட்டம் இழந்து விடுகிறார்கள். அந்த தவறை சுப்மான் கில் செய்யவில்லை என்று அஜித் அகார்கர் பாராட்டி இருக்கிறார். 2022 ஆம் ஆண்டில் ஒரு நாள் போட்டியில் அதிக சராசரி வைத்துள்ள இந்திய வீரர் மற்றும் தொடக்க வீரராக 14 இன்னிங்ஸ்க்கு பிறகு அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனிடையே கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஷிகர் தவான் 28 ரன்களிலும், சுப்மான் கில் 13 ரன்களிலும்,  ரிஷப் பண்ட் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 21 ஒவ்வொரு முடிவில் 87 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.