“எப்டி போனேனோ அப்டியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”.. ரஞ்சி டிராபியில் இரட்டை சதமடித்த ரகானே!

0
1300

ரஞ்சிக்கோப்பையில் மும்பை அணிக்காக இரட்டை சதம் அடித்து அசத்தியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரகானே.

ரஞ்சிக்கோப்பையில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதி வரும் போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

- Advertisement -

இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வரும் அஜிங்கிய ரகானே மும்பை அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று வழி நடத்துகிறார். துவக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் யசெஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர்.

பிரிதிவி ஷா 19 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 80 பந்துகளில் 90 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் தொடர்ந்து ரகானே உடன் பாட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்த உதவினார்.

ஜெய்ஸ்வால் 195 பந்துகளில் 162 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நிலைத்து ஆடி வந்த ரகானே, சதம் அடித்த பிறகு சர்ப்ராஸ் கான் உடன் பாட்னர்ஷிப் அமைத்தார். இறுதியில் 261 பந்துகள் படித்து 204 ரன்களுக்கு வெளியேறினார்.

- Advertisement -

தொடர்ந்து ஃபார்மில் இல்லை என்று அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரகானே ரஞ்சிக்கோப்பையில் அசத்தி வருவதால் இந்திய அணி நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய தேர்வுக்குழுவினருக்கும் இரட்டை சதம் அடித்து மீண்டும் ஃபார்மில் தான் இருக்கிறேன் என அறிவிப்பு விடுத்திருக்கிறார். மோசமான பார்மில் இருக்கும் கேஎல் ராகுலுக்கு இது சிக்கலை உண்டாக்கியுள்ளது.

மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு 636 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது. இதில் சதம் அடித்துள்ள சர்ப்ரைஸ் கான், 123 ரன்கள்டனும் சம்ஸ் நூலானி 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.