இலங்கை டெஸ்ட் தொடரில் பிளேயர் ஆஃப் தி சீரிஸ் விருது வென்ற தேவ்தத் படிக்கல்லின் அதிரடி ஆட்டம் குறித்தும், இந்திய அணியின் நம்பர் 3 பேட்டிங் பொசிஷன் குறித்தும் அஜின்க்யா ரஹானே பேசியிருக்கிறார்.
கர்நாடகா அணியை சேர்ந்த தேவ்தத் படிக்கல் ரஞ்சி டிராபி மற்றும் விஜய் ஹசாரே தொடரில் ரன்களை குவித்து அபாரமான பார்மில் இருந்தார். காயமடைந்த சாய் சுதர்சனுக்கு பதிலாக கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 3 இன்னிங்ஸ்களில் 2 செஞ்சுரி உட்பட 328 ரன்கள் விளாசி சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
நம்பர் 3 இடத்தில் களம் இறங்கி பவுலர்களுக்கு பிரஷர் கொடுக்கும் வகையில் ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய படிக்கல்லின் பேட்டிங் ஸ்டைல் மற்றும் இண்டெண்ட் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அஜின்க்யா ரஹானே பேசும்போது “அவர் தற்காலிகமாக நம்பர் 3 இடத்தை சீல் செய்துள்ளார். இது அவருடைய சொந்த கடின உழைப்பு, அவரின் இந்த பெர்ஃபார்மன்ஸ் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் நியூசிலாந்திற்கு செல்லும் போது அங்கு கன்டிஷன்ஸ் வேறு மாதிரியாக இருக்கும், அதற்கு தயாரிப்புகளும் வேறு மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது நாம் இந்த இரண்டு செஞ்சுரிகளை கொண்டாடுவோம்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “இரண்டு போட்டிகளிலும் படிக்கல் பேட்டிங் செய்த விதத்தில், நம்பர் 3 இடத்தில் ஆடும்போது பவுலர்களை எப்படி டாமினேட் செய்வது என்பது தெளிவாக தெரிந்தது. பேட்டராக எப்போதுமே டிசிசிவ்-வாக இருப்பது முக்கியம். அவரிடம் அனைத்து ஷாட்களும் இருந்தன. கிடைத்த வாய்ப்பை அதிகாரத்தோடும் சிச்சுவேஷனை சரியாக புரிந்தும் பயன்படுத்தி ரன்களை குவித்துள்ளார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.