ஜிம்பாப்வே தொடருக்குத் தேர்வான நட்சத்திர இந்திய வீரர் காயம்; தொடரிலிருந்து விலகலா?

0
1544

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று அங்கு ஷிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி அதை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து ரோகித் சர்மா தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று அந்தத் தொடரை 4-1 வென்றது!

இது எடுத்து இந்திய நட்சத்திர வீரர்களை கொண்ட அணி வருகின்ற இருவத்தி ஏழாம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் கலந்து கொள்ள இருக்கிறது. இதற்கு நடுவில் 18 20 22 ஆகிய தேதிகளில் ஷிகர் தவான் தலைமையில் ஒரு இளம் இந்திய அணி ஜிம்பாப்வே சென்று அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தொடருக்கு தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் தேர்வாகி இருந்தார். இவர் கடந்த ஐபிஎல் போட்டியின்போது கையில் காயமடைந்து 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி அனைத்து வெளியில் இருந்தார். அதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி காயமடைந்தார்.

இவர் இந்த காயங்களுக்காக நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் மேற்பார்வையில் இருந்து வந்தார். பின்பு காயம் சரியாகிய இவர் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி போட்டிகளில் விளையாட லங்காசையத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாட சென்றார்.

தற்பொழுது இங்கிலாந்தில் ராயல் லண்டன் கோப்பை என்ற பெயரில் கவுண்டி அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஒரு வொர்ஸ்செஸ்டர் அணிக்கு எதிராக லங்காசெயர் அணிக்காக களம் இறங்கிய வாசிங்டன் சுந்தர் மைதானத்தில் தோள்பட்டையில் காயமடைந்து கள மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு போட்டியில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வரும் வாஷிங்டன் சுந்தர் முதலில் கால் விரலில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட நாள் அணியில் இடம்பெற முடியாமல் இருந்தார். இதையடுத்து இந்த ஆண்டு துவக்கத்தில் தென்ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணியில் கோவிட் காரணமாக இடம் பெற முடியாமல் போனார். தற்பொழுது ஜிம்பாப்வே தொடருக்கு முன்பாக தோள்பட்டையில் காயமடைந்து இருக்கிறார். இந்த காயம் எப்படிப்பட்டது, இந்த காயத்தில் இருந்து மீண்டு வந்து 18ஆம் தேதி துவங்கும் ஒரு நாள் தொடரில் பங்கேற்பாரா எனத் தெரியவில்லை.

தற்பொழுது ஒரு ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர் இந்திய டி20 அணிக்கு தேவைப்படுகிறார். இவர் அடிக்கடி காயத்திரி சிக்கிக் கொள்கின்றன காரணத்தினாலே ஓரளவு பேட்டிங் செய்யக்கூடிய ஆப் ஸ்பின்னரான அஸ்வினுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது. இவர் காயங்கள் இல்லாமல் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் இவருக்கு எதிர்காலத்தில் இந்திய அணியில் பிரகாசமான வாய்ப்புகள் இருக்கிறது!